இ சேவை மையம் சான்றிதழ்

இ சேவை மையம் சான்றிதழ் ( E sevai maiyam certificate status download ) - முதலில் இ சேவை மையம் என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். ஆரம்பக்காலகட்டத்தில் அரசு சார்ந்த ஏதாவது ஒரு சான்றிதழை பெற வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட துறைகளில் விண்ணப்பம் மற்றும் சரியான ஆவணங்களை கொடுத்து அதற்கான கட்டணமும் செலுத்த வேண்டும். ஆனால் அதற்கு சில பல நாட்கள் ஆகும்.

இ சேவை மையம் சான்றிதழ்

2014 இல் தகவல் தொழில்நுட்பவியல் துறை மற்றும் டிஜிட்டல் சேவை துறையால் இ மற்றும் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் நகராட்சிற்கு ஒன்று இரண்டோ மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது பஞ்சாயத்திற்கு ஒன்று வந்துவிட்டது என்றும் கூறலாம்.

வருவாய்துறையில் பெறப்படுகின்ற அனைத்து சான்றிதழ்களும் 7 முதல் 15 நாட்களுக்குள் ரூபாய் 60 செலுத்தி பெறலாம். அதற்கான விண்ணப்ப நிலையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

1. பிறப்பு சான்றிதழ்

2. இருப்பிட சான்றிதழ்

3. வருமான சான்றிதழ்

4. உழவர் அட்டை

5. முதல் பட்டதாரி

6. சாதி சான்றிதழ்

7. ஆதார் அட்டை

8. வாக்காளர் அடையாள அட்டை

9. பான் கார்டு

10. கிசான் கார்டு

11. நலவாரிய அட்டை

12. குடும்ப அட்டை.

குறிப்பு

மேலே உள்ள ஆவணங்கள் மட்டும் தான் கிடைக்கும் என்று நினைத்து கொள்ளாதீர்கள். இதற்கு மேலேயே ஆவணங்கள் இ சேவை மையம் மூலம் நமக்கு கிடைக்கிறது.

Esevai Maiyam