பான் கார்டு பிறந்த தேதி திருத்தம்

பான் கார்டு பிறந்த தேதி திருத்தம் - பான் கார்டு என்பது வருமான வரி தாக்கல் செய்வதற்கு மட்டும் இல்லை. சாதாரண மக்கள் தனது பி எப் பணம் எடுப்பதற்கும், லோன் வாங்குவதற்கும், எதிர் காலத்தில் வரிகளை கட்டுவதற்கும் இந்த பான் கார்டு உபயோகமாகிறது. வரிகள் கட்டுவோர் மட்டும் இந்த பான் கார்டு பயன்படுத்த வேண்டும் அவசியமில்லை. வரிகளை கட்டாதவர்களும் இந்த இந்த பான் கார்டினை பயன்படுத்தலாம். இந்தியாவில் உள்ள மக்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இதற்கு தகுதியானவர்கள் ஆவர். பான் கார்டை ஒருவர் ஒரு பெயரில் மட்டும் தான் ஓபன் செய்ய வேண்டும். இரண்டு அல்லது மூன்று கார்டுகளை வைத்திருப்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். ஒருவேளை கம்பெனி வைக்க போகிறீர்கள் என்றால் அதற்கு மற்றொமொரு கார்டு அப்ளை செய்து வாங்கி கொள்ளலாம்.

பான் கார்டு பிறந்த தேதி திருத்தம்


எப்படி பிறந்த தேதியை பான் கார்டு வெப்சைட் இல் மாற்றம் செய்வது ?

1. முதலில் utiitsl வெப்சைட் க்கு செல்லுங்கள்

2. அதில் பான் கார்டு சர்வீஸ் இல் சென்று அப்ளை ஆன்லைன் கொடுக்கவும்

3. அப்படி கொடுத்தால் சேன்ஜ் ஆர் கரக்ஷன் செலக்ட் செய்யவும்

4. மறுபடியும் இன்னொரு பேஜ்க்கு சென்று அங்கு அப்ளை பார் சேன்ஜ் கொடுத்தால் இறுதி பக்கம் ஓபன் ஆகும்

பான் கார்டு அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள்

5. இந்த பக்கம் தான் நீங்கள் உங்கள் பிறந்த தேதி மற்றும் இதர எதாவது மாற்றம் செய்வதற்கு உபயோகிக்க வேண்டும்.


6. இந்த பக்கத்தில் முதலில் உங்கள் பத்து இலக்க எண்களை போட்டால் ஒரு குறிப்பு எண் ஒன்றை கொடுப்பார்கள். அதனை வைத்து கொண்டு தான் உங்கள் கார்டு நிலைமை என்னவென்று அவ்வப்போது அறிந்து கொள்ள முடியும். 

7. மொத்தமாக நான்கு படிகளில் உங்கள் திருத்தங்களை சரி செய்து கொள்ள முடியும். ஒன்று உங்கள் பர்சனல் டீடெயில்ஸ், அட்ரஸ் டீடெயில்ஸ், அதர் டீடெயில்ஸ் மற்றும் அப்லோட் டாக்குமெண்ட்ஸ்.


8. இதனை செய்தாலே உங்கள் பான் கார்டு மாற்றங்கள் ஓரிரு வாரத்திற்குள் சரி ஆகி விடும். இதற்காக கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.