நத்தம் பட்டா இல்லாமல் வீட்டுக்கு வரி

நத்தம் பட்டா இல்லாமல் வீட்டுக்கு வரி - முதலில் நாம் நத்தம் என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். நத்தம் என்பது மக்கள் வாழும் ஒரு அரசாங்கம் சார்ந்த புறம்போக்கு நிலமாகும். கிராம நத்தம் அல்லது நத்தம் புறம்போக்கு இந்த இரண்டிற்குமே ஒரே அர்த்தங்கள் தான். இந்த இரண்டும் வெவ்வேறு என்று நினைத்து கொள்கிறார்கள்.

நத்தம் பட்டா இல்லாமல் வீட்டுக்கு வரி


கிராமத்தில் ஏரி, நீர்நிலை, ஊர் நத்தம் அல்லது மற்ற புறம்போக்கு நிலங்கள் இருக்கும். இதில் நத்தம் புறம்போக்கில் மட்டுமே மக்கள் வாழ அனுமதி செய்யப்படுகிறார்கள். மற்ற புறம்போக்கு நிலங்கள் அரசாங்க பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

இதையும் படிக்க: tamilnilam

நத்தம் புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கு அந்த நிலத்திற்கு உண்டான பத்திரம் மட்டுமே இருக்கும். ஆனால் பட்டா இருப்பதில்லை. இது அனைத்து கிராமங்களெல்லாம் இல்லை. ஏதாவது ஒரு சில கிராமங்களில் வாழும் மக்களுக்கு பட்டா இருப்பதில்லை. இரு ஆவணங்களும் முக்கியம் என்பதை நினைவில் கொள்தல் அவசியம்.

இதையும் வாசிக்க: Tnreginet. gov. in patta

இந்த நிலத்திற்கு வீட்டு வரி ரசீது வாங்க முடியுமா என்றால் வாங்க முடியும். கிராம ஊராட்சியில் கிராம தலைவரின் கீழ் வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி வசூல் செய்யப்படுகிறது. அவ்வாறு வசூல் செய்யப்படுகின்ற தொகைக்கு உண்டான ரசீதுகளும் வழங்குகிறார்கள்.

இதையும் தெரிந்துக்கொள்ள: EC Patta