பட்டா நகல் பெறுவது எப்படி

பட்டா நகல் பெறுவது எப்படி - பட்டாவின் நகல்கள் நாம் இணையத்தளத்தில் மிகவும் எளிதாக எடுக்க முடியும். ஆனால் வருவாய்துறையினரால் பெறப்படும் அசல் பட்டா ஆவணம் இணையத்தளத்தில் எடுக்க முடியாது. மொத்தம் பட்டாவின் நகல்கள் இருவகைப்படும். ஒன்று நமது பெயரிலோ அல்லது வீட்டில் உள்ள யாராவது பெயரிலோ அல்லது மற்றவர் பெயரிலோ இருக்கின்ற நிலத்தின் பட்டா ஆவணம். மற்றொன்று பட்டா உத்தரவு நகலாகும். இவ்விரண்டிற்குமே வேறுபாடுகள் மிகவும் அதிகமாக இருக்கும்.

பட்டா நகல் பெறுவது எப்படி


பட்டா நகல்

உங்களுடைய நிலத்தின் தீர்வை, பெயர், ஊர், நிலத்தின் வகைப்பாடு, எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள eservices வெப்சைட்ற்கு சென்று உங்கள் வருவாய்த்துறை கிராமம், சர்வே எண் மற்றும் இதர விஷயங்களை செய்தாலே உங்களுக்கான நகல் பட்டா கிடைத்துவிடும்.

இதையும் காண்க: Tamilnilam

பட்டா உத்தரவு நகல்

உத்தரவு நகல் என்றால் இது வரைக்கும் அந்த நிலம் பெயரில் இருந்தது இப்போது யார் பெயரில் இருக்கிறது என்பதனை காட்டும். இதிலும் பட்டா நகலில் இருப்பதை போலவே விவரங்கள் காட்டும். ஆனால் இது வரைக்கும் எவ்வளவு நிலம் இருந்தது என்றும் இப்போது எவ்வளவு நிலம் இருப்பதையும் காட்டும். ஒருவேளை சர்வே எண்ணை  உட்பிரிவு செய்திருந்தால் அத்தனையும் காட்டி விடும். இந்த உத்தரவு நகலை பெறுவதற்கு முதலில் பட்டாவின் நகலை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் இறுதியில் குறிப்புரைகள் என்று இருக்கும். அந்த குறிப்புரையினை வைத்து தான் இந்த உத்தரவு நகலை எடுக்க முடியும்.

இதையும் காண்க: patta chitta fmb map download