புதிய குடும்ப அட்டை ஆன்லைனில் பெறலாம்

புதிய குடும்ப அட்டை ஆன்லைனில் பெறலாம் - முன்பு எல்லாம் புதியதாக ஒரு குடும்ப அட்டை வாங்க வேண்டுமென்றால் நம் வீட்டு அருகில் உள்ள நுகர்வோர் நிலையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த அட்டை வருவதற்கு ஏகப்பட்ட நாட்கள் ஆகும். இதனால் குடும்ப அட்டைக்கான பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படும். ஏனென்றால் பொருட்கள் வாங்கும் மக்கள் நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு மிகவும் சிரமம் ஏற்படும்.

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய

புதிய குடும்ப அட்டை ஆன்லைனில் பெறலாம்


புதிதாக குடும்ப கார்டு வாங்குவதற்கு வீட்டு வரி ரசீது, மின் கட்டண வரி கட்டாயம் தேவைப்படுகிறது. நாம் வீட்டிலேயிருந்தபடியே அப்ளை செய்தால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விடும். பொது இ சேவை மையம் சென்று விண்ணப்பத்தில் விண்ணப்பித்த நாளில் இருந்து முப்பது நாட்களுக்குள் வந்து விடும். இந்த முப்பது நாட்கள் என்பது ஒரு தோராயம் தான். அதற்கு முன்னர் நாட்களுக்குள் வரவும் வாய்ப்பிருக்கிறது. அதும் இல்லாமல் இ சேவை மையம் சென்று விண்ணப்பத்தில் உங்கள் ஆவணம் ரிஜெக்ட் 100 சதவீதம் ஆகாது.

இதையும் படிக்க: வீட்டு வரி ரசீது பெறுவது எப்படி

இதனால் தமிழக அரசு ஸ்மார்ட் கார்டு சிஸ்டம் ஒன்று கொண்டு வந்தது. அதாவது ஆன்லைனில் அப்ளை செய்யும் விதம் மற்றும் பொருட்கள் வாங்கினால் அதையும் ஆன்லைனில் பார்க்கும் வசதி கொண்டு வந்தது. இது மட்டுமில்லாமல் நம்முடைய பெயரை சேர்ப்பதற்கும் அல்லது ஒரு பெயரை நீக்குவதற்கும் மற்றும் ஏதாவது நம்முடைய ஸ்மார்ட் கார்டில் திருத்தம் செய்வதற்கும் முன்பெல்லாம் நடையாய் நடக்க வேண்டி இருக்கும்.

ஆனால் இப்போது நாம் நுகர்வோர் மையத்தில் பொருட்கள் வாங்க மட்டும் செல்ல வேண்டும். மற்ற அனைத்தும் ஆன்லைனில் நம்மால் பார்த்து கொள்ள முடியும் என்கிற வசதியை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இரண்டு வழிகளில் நாம் புதிய குடும்ப அட்டை ஆன்லைன் அதாவது ஸ்மார்ட் கார்டு அப்ளை செய்யலாம்.

வழிமுறைகள்

1. வீட்டில் அப்ளை செய்ய முடியும் 

2. இ சேவை மையம் 

மேலே இரண்டு வழிகளை பயன்படுத்தி புதிய ரேஷன் அட்டையை விண்ணப்பிக்க முடியும். நீங்கள் வீட்டிலே அப்ளை செய்யும் நபர்கள் என்றால் உங்கள் அனைத்து விதமான ஆவணங்களையும் ஸ்கேன் செய்து வைத்து இருக்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு வர தாமதம் ஏற்பட்டால் அதன் நகல் கொண்டு உங்கள் ரேஷன் கார்டு பொருட்களை எல்லாம் எளிதாக அருகில் உள்ள ரேஷன் கடையில் வாங்க முடியும்.

குடும்ப அட்டை பெயர் நீக்கல் சான்று

நியூ ரேஷன் கார்டு அப்ளை ஆன்லைன் தமிழ்நாடு

Tnpds