சாதி சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள்

சாதி சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள் ( community certificate in tamil ) - சாதி சான்றிதழை ஆங்கிலத்தில் கம்யூனிட்டி செர்டிபிகேட் என்று கூறலாம். அனைத்து தர மக்களும் இந்த சாதி சான்றிதழை புதுப்பித்து வருகின்றனர். இந்த சான்றிதழ் எந்த வகுப்பை சேர்ந்தவர் மற்றும் அரசு தரும் சலுகைகளுக்கு முன்னுரிமையை அளிக்கும் விதமாக இது திகழ்கிறது. ஒரே ஒரு முறை மட்டுமே இந்த சாதி சான்றிதழ் நாம் பெற்றால் போதுமானது. உதாரணமாக வருமான சான்றிதழ் என்று எடுத்துக்கொண்டால் ஆறு அல்லது பன்னிரண்டு மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஆனால் அது இது போன்றதல்ல. முன்பு எல்லாம் அட்டை வடிவத்தில் கொடுப்பார்கள். இப்போது சாதாரண ஒரு ஷீட்டில் கொடுக்கிறார்கள்.

சாதி சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள்


சாதி சான்றிதழ் பெறுவது எப்படி

நாம் ஏற்கனவே இந்த இணையத்தளத்தில் வருமானம், இருப்பிடம், விதவை சான்றிதழ் போன்ற பதிவுகளை அப்டேட் செய்துள்ளோம். அதே போன்றே தான் இந்த செர்டிபிகேட் அப்ளை செய்யலாம். ஏற்கனவே கேன் நம்பர் ரெஜிஸ்டர் செய்திருந்தால் வேலை இன்னும் சுலபமாக இருக்கும். இந்த கேன் நம்பர் ரெஜிஸ்டர் செய்திருந்தால் எந்த வித சான்றிதழையும் அப்ளை செய்ய முடியும். ஒருவேளை அப்ளை செய்யாமல் இருந்தால் ரெஜிஸ்டர் செய்து விட்டு தான் பண்ண முடியும்.

இருப்பிட சான்றிதழ்

தேவையான டாக்குமெண்ட்ஸ்

1. போட்டோ

2. அட்ரஸ் ப்ரூப்

3. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி இவர்களில் ஒருவருடைய சாதி சான்றிதழ் வேண்டும். 

4. சுய உறுதிமொழி ( இது நீங்கள் அப்ளை செய்யும்போதே ஒரிஜினல் வெப்சைட்யிலே கொடுத்து விடுவார்கள் ).

பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி 2024

சாதி சான்றிதழ் விண்ணப்ப படிவம்

விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆன்லைனிலே மட்டுமே கிடைக்கும். நேரில் சென்று விண்ணப்பிக்கும் நிலை தற்போது இல்லை. இந்த சான்றிதழை அப்ளை செய்வதற்கு பணமாக ரூபாய் அறுபது கட்ட நேரிடும். முதலில் உங்கள் விண்ணப்பம் வி ஏ ஓ, ஆர் ஐ, டெபுடி தாசில்தார் மற்றும் தாசில்தார் இவர்கள் விசாரித்து சரிபார்த்த பின்னர் உங்கள் விண்ணப்பம் ஓகே ஆகி விடும். சாதி சான்றிதழ் online apply செய்ய Tnesevai வெப்சைட்ற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மற்றொரு கேள்விகளும் மக்கள் மனதிலும் எழும். அது என்னவென்றால் சாதி சான்றிதழ் இனி 48 மணி நேரத்தில் வழங்கப்படும் என்கிற செய்தி தான். அது உங்கள் விண்ணப்ப நிலை பொறுத்ததே. ஒரு சில காரணத்தினாலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் 90 சதவீதம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதில்லை.

இதையும் காண்க: Veetu vari online payment