rev-103 வருமான சான்றிதழ் - வருமானம் என்பது ஒரு தனிப்பட்ட நபரின் மாத மற்றும் ஆண்டு எவ்வளவு தான் சுய சம்பாதத்தில் வருமானம் ஈட்டுகிறாரோ அதனை வருமானம் எனலாம். இதற்காக நாம் சான்றிதழ்களை வாங்குவது கட்டாயம் ஆகும். நாம் எதற்கு வாங்க வேண்டும். வாங்காமலே போகலாம் என்கிற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.
படிக்கும் குழந்தைகள் அல்லது சிறுவர்களாக இருந்தால் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வருமான சான்றிதழ் தேவைப்படும். மேலும் மேற்படிப்புக்கு வருமானம் சான்றிதழ்கள் கட்டாயம் தேவைப்படும். வேளைக்கு சென்றால் கூட கண்டிப்பாக தேவைப்படும்.
அத்தகைய வருமான சான்றிதழ் வேண்டுமென்றால் நாம் என்ன செய்வது. வீட்டில் இருந்தும் கூட நாம் அப்ளை செய்யலாம். அல்லது இ சேவை மையம் சென்று கூட விண்ணப்பிக்கலாம்.
1. முதலில் நீங்கள் TnEga இணையதளம் செல்லுங்கள்
2. இரண்டாவதாக நீங்கள் லாகின் செய்யுங்கள்.
3. மூன்றாவதாக rev-103 income certificate என்ற option யை தேர்வு செய்யுங்கள்.
4. பின்னர் அதில் கேட்கும் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்.
வருமான சான்றிதழ் நீங்கள் அப்ளை செய்வதற்கு சர்வீஸ் சார்ஜ் 60 வசூலிக்கப்படும். மேலும் அதில் நீங்கள் உங்கள் புகைப்படம், அட்ரஸ் ப்ரூப், TIN நம்பர், ஸ்மார்ட் கார்டு, செல்ப் declaration form மற்றும் salary ஸ்லிப் போன்றவையெல்லாம் இணைக்க வேண்டும்.
மேலும் இதையெல்லாம் நீங்கள் upload மற்றும் விவரங்களை பூர்த்தி செய்யும் முன்னர் CAN நம்பர் அப்ளை செய்து இருக்க வேண்டும். அதற்கு பிறகு தான் நீங்கள் முழுவதுமாக அக்சஸ் செய்ய முடியும்.