-->
பிறப்பு சான்றிதழ் விண்ணப்பம் Pdf படிவம்

பிறப்பு சான்றிதழ் விண்ணப்பம் Pdf படிவம்

பிறப்பு சான்றிதழ் விண்ணப்பம் Pdf படிவம் - தமிழ்நாடு பிறப்பு சான்றிதழை எப்படி பெறுவதும் மற்றும் எப்படி பதிவிறக்கம் செய்வதும் இந்த பக்கத்தில் பார்ப்போம். பிறப்பு சான்றிதழ் என்பது ஒரு மனிதர் பிறந்ததற்கான ஒரு அங்கீகாரமாக கருதப்படுகிறது. எந்த மருத்துவமனையில் பிறந்தார்கள், எந்த தேதியில் பிறந்தார்கள் என்பதை துல்லியமாக பிறப்பு சான்றிதழில் அப்டேட் செய்து இருப்பார்கள். அப்படி அப்டேட் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் பிறந்த சான்றிதழை விண்ணப்பித்து இருக்க மாட்டிர்கள். 

ஆதார் கார்டு பிறந்த தேதி திருத்தம்

பிறப்பு சான்றிதழ் விண்ணப்பம் Pdf


பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம்

படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் மேற்கொண்டு அரசு துறையில் வேலையில் சேர்ப்பதற்கும் மிகவும் உபயோகமாகிறது. மேலும் வெளிநாடு செல்லும் நபர்களுக்கும் இத்தகைய சான்றிதழ் பயன் தருகிறது. இந்த பிரபு சான்றிதழ் மற்ற சான்றிதல்களை போல் இல்லாமல் தனியாக செயல்படுகிறது.

ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி

பிறப்பு சான்றிதழ் download

புதியதாக நீங்கள் பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. வேண்டுமென்றால் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் 1910 லிருந்து 2017 வரையும் தான் சான்றிதல்களை டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

குழந்தை பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி

ஆன்லைன் பிறப்பு சான்றிதழ் 

1. பிறப்பு சான்றிதழ் நகல் எடுக்க Tnurbanepay இணையத்தளம் சென்று ரெஜிஸ்டர் செய்து லாகின் செய்து உள்ளே செல்லுங்கள்.


2. Navigation இல் சர்ச் என்று இருக்கும். அதனை தேர்வு செய்த உடன் பிறப்பு சான்றிதழ் பிரிண்ட் மற்றும் சர்ச் என்பது போன்றவைகள் இருக்கும்.


3. அதில் முதல் option யை தேர்வு செய்ய வேண்டும்.


4. அப்படி நீங்கள் ஸ்டேப் மூன்றை பின்பற்றினால் organization, பிறந்த தேதி மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் அதில் கொடுக்க வேண்டும்.


5. அனைத்து விபரங்கள் தேர்ந்து எடுத்த உடன் சர்ச் என்பதனை கொடுத்தால் உங்கள் பிறப்பு சான்றிதழ் ஓபன் ஆகும்.


6. உங்கள் பிறப்பு சான்று ஓபன் ஆன பின்னர் அதனை பிரிண்ட் எடுத்து கொள்ளுங்கள். அப்படி பிரிண்ட் எடுத்த சான்று நகல் ஒரிஜினல் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் ஒரிஜினல் தொலைந்து விட்டால் இந்த நகலை பயன்படுத்தி உங்கள் முன்சிபாலிட்டி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க செல்லுங்கள்.