-->
ஆதார் கார்டு பிறந்த தேதி திருத்தம்

ஆதார் கார்டு பிறந்த தேதி திருத்தம்

ஆதார் கார்டு பிறந்த தேதி திருத்தம் - ஆதார் கார்டில் வரும் சிறிய சிறிய பிழைகள், மாற்றங்கள் இவைகளை சரி செய்ய ஆதார் அலுவலகத்திற்கும் அல்லது இ சேவை மையத்திற்கு செல்ல தேவை இல்லை. அப்படி பிறந்த தேதியை எவ்வாறு மற்றும் எப்படி மாற்றுவது என்று பார்ப்போம். முக்கியமாக ஒரே ஒரு முறை மட்டும் தான் உங்கள் வாழ்நாளில் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை மாற்ற முடியும். முடிந்த வரையில் அதனை சரி செய்ய சரியான பிறந்த தேதியை அதில் என்டர் செய்யுங்கள்.

ஆதார் கார்டு பதிவிறக்கம்

ஆதார் கார்டு பிறந்த தேதி திருத்தம்


ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதியை எப்படி மாற்றுவது அல்லது திருத்தம் செய்வது ?

1. Uidai இணையதளத்திற்கு சென்று அப்டேட் ஆதார் என்கிற தலைப்பை தேர்ந்தெடுக்கவும்.


2. அதனை தேர்வு செய்த உடன் லாகின் மற்றும் உங்கள் ஆதார் எண், குறியீடு எண் மற்றும் அதற்கான OTP யை உள்ளிடவும்.

ஆதார் கார்டு எடுப்பது எப்படி

3. இதனை அனைத்தும் முடித்த பின்னர் புதுப்பித்தல் என்று இருக்கும். மொத்தமாக நீங்கள் புதுப்பிக்க வேண்டுமென்றாலும் அதனை உபயோகிக்கலாம்.


4. புதுப்பித்தல் முடித்த பின்னர் இரண்டாவது options ஆக பிறந்த தேதியை செலக்ட் செய்யுங்கள்.


5. உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டும் தான் உங்கள் ஆதார் பிறந்த தேதியை மாற்ற முடியும். அதனை மாற்றும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


தேவையான ஆவணங்கள் 

1. பள்ளி சான்றிதழ்

2. பாஸ்போர்ட் 

3. பிறப்பு சான்றிதழ் 

4. பான் கார்டு 

5. வாக்காளர் அடையாள அட்டை 

6. மாற்று சான்றிதழ் 

7. எதில் உங்களுடைய பிறந்த தேதி சரியாக இருக்கிறதோ அதனை ஸ்கேன் செய்து அப்லோட் செய்து விடுங்கள்.

குறிப்பு 

இதற்காக அரசு உங்களிடம் 50 ரூபாய் வரையும் கட்டணங்களாக வசூலிப்பார்கள். அப்படி மாற்றிய விவரங்கள் அப்டேட் ஆகுவதற்கு சில நாட்கள் எடுத்து கொள்ளும். அப்படி முடிந்தால் புதிய பிவிசி அட்டையை அதிலே தேர்வு செய்து கொள்ளுங்கள். அதனை பெறுவதற்கும் ரூபாய் 50 கட்ட வேண்டும். நீங்கள் அப்ளை செய்த நாளில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் கண்டிப்பாக பிவிசி ஆதார் அட்டை உங்கள் வீட்டிற்கு வரும்.

ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி

கிசான் கார்டு வாங்குவது எப்படி