ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி

ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி - ஆதார் கார்டினை எந்த வித கட்டணமும் இல்லாமல் எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு கார்டு வகையில் வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்தி தான் வாங்க வேண்டும். இன்றைய டிஜிட்டல் உலகில் ஆதார் கார்டு அனைத்து விதமான காரணங்களுக்காக உபயோகமாகிறது. ஆதார் கார்டு இல்லாமல் ஏதும் நடக்கப்போவதில்லை என்றும் சொல்லலாம். 

ஆதார் கார்டு எடுப்பது எப்படி


எதற்காக இந்த ஆதார் கார்டு ? 

1. பாஸ்போர்ட் அப்ளை செய்ய 

2. பிறப்பு சான்றிதழ் அப்ளை செய்ய 

3. பான் கார்டு 

4. கிசான் கார்டு 

5. குடும்ப அட்டை 


மேலே உள்ள விஷயங்களுக்கு மட்டுமே அல்ல இந்த ஆதார் அட்டை. நம் வாழ்நாளில் 90 சதவீதம் இந்த அட்டையை உபயோகப்படுத்துகிறோம். நீங்கள் சாதாரண முறையிலும் அல்லது ஒரிஜினல் போலவும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அப்படி ஒரிஜினல் போல நீங்கள் பதிவிறக்கம் செய்ய கடவுச்சொல் கேட்கும்.


அந்த கடவுச்சொல் ஒவ்வொரு முறையும் கேட்கும். நீங்கள் ஏற்கனவே அந்த அட்டையை பதிவிறக்கம் செய்தாலும் கடவுச்சொல் ஒவ்வொரு முறையும் என்டர் செய்ய வேண்டும். அப்படி ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் என்டர் செய்தால் தான் உங்களுக்கான Uidai ஆதார் அட்டை ஓபன் ஆகும்.

எப்படி அந்த கடவுச்சொல்லை கண்டுபிடிப்பது ?

1. உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்து மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். உங்கள் பெயர் 10 மேல் இருந்தாலும் கூட initial தவிர்த்து உங்கள் பெயரின் முதலில் வரும் 4 எழுத்துக்கள் எடுத்து கொள்ள வேண்டும். அந்த நான்கு எழுத்துக்கள் கேப்பிடல் எழுத்துக்களில் எழுத வேண்டும். 

2. இரண்டாவதாக உங்கள் பிறந்த வருடம்.

3. இந்த இரண்டையும் இடைவெளி இல்லாமல் என்டர் செய்தால் உங்கள் ஆதார் அட்டை ஓபன் ஆகும்.