-->
ஆதார் கார்டு எடுப்பது எப்படி

ஆதார் கார்டு எடுப்பது எப்படி

ஆதார் கார்டு எடுப்பது எப்படி - ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்ய ஆன்லைனில் ஒரு நிமிடம் போதும். ஆனால் புதியதாக எடுக்க வேண்டுமென்றால் ஆன்லைனில் எடுக்க முடியாது. அது நாம் நேரிடையாக அருகில் உள்ள enrollment centre க்கு தான் செல்ல வேண்டும். நம்முடைய விவரங்கள், முகவரி, குடும்பத்தார் விவரங்கள் அனைத்தும் நாமே அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால் இதர கை ரேகை போன்ற விஷயங்கள் நம்மால் செய்ய முடியாத காரணத்தால் centre செல்ல நேரிடும்.

ஆதார் கார்டு எடுப்பது எப்படி


குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுப்பது எப்படி

குழந்தைகள் கை ரேகை இல்லாமலே பெற்றோர்கள் தொலைபேசி எண், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மட்டுமே போதுமானது. பொதுவாக அனைத்து ஊர்களிலும் சிறப்பு முகாம் ஒன்று பஞ்சாயத்தில் நடத்துவார்கள். அப்போது உங்கள் குழந்தை, பிறப்பு சான்றிதழ் மற்றும் கட்டணமாக ரூபாய் ஐம்பது கொடுத்தால் அப்ளை செய்த பதினைந்து நாட்களுக்குள் வந்து விடும். சிறப்பு முகாம் இல்லை நகராட்சியில் ஆதார் சேவை மையம் நிறைய இருக்கிறது. அங்கே சென்று விண்ணப்பித்து கொள்ளலாம்.

புதியதாக யார் வேண்டுமானாலும் ஆதார் கார்டு விண்ணப்பித்து கொள்ளலாம். இதற்காக ஆவணங்களாக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு ஆகியவைகளை எடுத்து கொள்ள வேண்டும். புதிய குழந்தைக்கு ஆதார் கார்டு விண்ணப்பிக்க எந்த வித ஆவணங்களும் தேவை இல்லை என்பது சொல்ல முடியாது. குழந்தையின் பெற்றோர்கள் ஆதார் கார்டு மற்றும் பிறந்த சான்றிதழ் இருந்தால் போதுமானது.

ஒரு சில நேரத்தில் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் இருந்தால் தான் ஆதார் அட்டை எடுக்க முடியும் என்று கூறுவார்கள். ஏனென்றால் வெரிஃபை செய்வதற்கு பிறந்த சான்றிதழ் ஏதுவாக இருக்கின்ற காரணத்தினால் அதனை ஸ்கேன் செய்து அப்லோட் செய்தால் உங்கள் குழந்தையின் ஆதார் அட்டை ஓரிரு மாதத்திற்குள் உங்கள் முகவரிக்கு வந்து விடும்.

ஆதார் அட்டை தொலைந்தால்

புதிதாக ஆதார் அட்டை எடுப்பது எப்படி 

1. Uidai ஆதார் இணையதளத்திற்கு சென்று புக் Appointment என்று கொடுக்கவும் 

2. அதில் proceed option யை தேர்வு செய்யவும் 

3. அப்படி செய்தால் இந்தியன் ரெசிடெண்ட் அல்லது நான் இந்தியன் ரெசிடெண்ட் என்கிற இரண்டு விதமான option எல்லாம் தோன்றும். 

4. பின்னர் உங்கள் தொலைபேசி நம்பர் அல்லது மின்னஞ்சல் முகவரி ஏதாவது ஒன்றை கொடுக்கவும்.

5. அப்படி கொடுத்த பின்னர் உங்கள் தொலைபேசிக்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ ஆறு இலக்க எண்கள் வரும். அந்த ஆறு இலக்க எண்களை வலது பக்கத்தில் உள்ள கட்டத்தில் என்டர் செய்தால் மற்றொரு பக்கத்திற்கு செல்லும்.

6. இதெல்லாம் செய்த முடித்த பின்னர் உங்கள் மாவட்டம் தாலுகா மற்றும் அஞ்சல் அலுவலகம் தேர்வு செய்தால் உங்களுக்கு அருகில் உள்ள நியூ Enrollment அலுவலகம் காட்டிவிடும்.

ஆதார் கார்டு திருத்தம் செய்ய

குறிப்பு 

ஒரு சில நேரத்தில் appointment கொடுத்தால் தான் புதிதாக ஆதார் அட்டை அப்ளை செய்ய முடியும். கட்டாயம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அப்படி செய்தால் வசதியாக இருக்கும். மேலும் ஆன்லைனிலே அப்ளை செய்யும் வசதி இன்னும் வரவில்லை. ஒருவேளை பின்னாளில் ஆன்லைனிலே விண்ணப்பிக்கும் முறை வரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அரசு அங்கீகரித்த ஆதார் சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் நீங்கள் சென்று விண்ணப்பிக்கலாம். ஆனால் கட்டணங்கள் கண்டிப்பாக மையத்திற்கு மையம் வேறுபடும் என்பதே உண்மை. முடிந்த அளவு நேரிலே சென்று விண்ணப்பித்தால் நல்லது. ஏனென்றால் ஆன்லைனில் அப்ளை செய்யும் வசதியும் மற்றும் குறித்த நேரத்தில் அப்பாய்ண்ட்மெண்டும் கிடைக்காத காரணத்தினால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி