ஆதார் அட்டை தொலைந்தால்

ஆதார் அட்டை தொலைந்தால் - பழைய ஆதார் கார்டு தொலைந்தால் எப்படி புதிதாக அட்டையை வாங்கி கொள்வது அல்லது PVC அட்டை பெறுவது எப்படி என்பதனை பார்ப்போம். ஒரு சில நேரங்களில் வெறும் ஆதார் அட்டை எண் மட்டுமே போதுமானது. ஆனால் அதனை எல்லா இடத்திலும் உபயோகிக்க முடியாத காரணத்தினால் அட்டை கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்.

ஆதார் அட்டை தொலைந்தால்


இப்போது எந்த லோன் எடுத்தாலும், வங்கி கணக்கு தொடங்குவதற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதற்கும், வேலை கிடைக்க கம்பெனியில் சேர்வதற்கும், Pf கிளைம் செய்வதற்கும் மற்றும் ஏராளமான விஷயங்களுக்கும் இந்த வகையான அட்டை தேவைப்படுகிறது.

லிங்க் ஆதார் டூ பான் கார்டு

ஆதார் எண் தொலைந்தால் அல்லது மறந்து போனால் என்ன செய்வது 

ஒரு சிலரிடம் ஆதார் அட்டை தொலைந்து தான் இருக்கும். ஆனால் ஒரு சிலரிடம் ஆதார் எண்ணே இருக்காது. அப்படி இருக்கும் நேரத்தில் அந்த எண்ணை எப்படி பெறுவது என்றால் myaadhar.uidai.gov.in வெப்சைட் சென்று உங்கள் தொலைபேசி எண், பெயர் கொடுத்தால் உங்கள் அட்டை ஓபன் ஆகும். அப்போது உங்கள் ஆதார் எண்னை குறித்து கொள்ளுங்கள்.

புதிய ஆதார் கார்டு பெறுவது எப்படி

அப்படி இருக்கும் நேரத்தில் உங்கள் கார்டு தொலைந்தால் மிகவும் சிரமம் ஏற்படும். அதனை வெறும் 1 ஒரே ஒரு நிமிடத்திற்குள் Uidai வெப்சைட் மூலம் எளிமையான முறையில் உங்கள் அட்டையை பதிவிறக்கம் செய்து அதனை மற்ற அடையாள அட்டை போன்றே பயன்படுத்தலாம்.

இதில் இரண்டு விதமான option நீங்கள் தான் சூஸ் செய்ய வேண்டும். ஒன்று வெறும் பிரிண்ட் எடுத்து கொள்வது இரண்டாவது PVC அட்டைகளை தேர்ந்து எடுத்து கொள்வதாகவும். இதில் உங்களுக்கு எது தேவையோ அதனை தேர்வு செய்யலாம். இரண்டாவதாக PVC செலக்ட் செய்தால் ரூபாய் ஐம்பது கட்டணமும் கார்ட் வருவதற்கு ஐந்து முதல் பதினைந்து நாட்கள் ஆகும். முதல் படியை தேர்வு செய்தால் ஒரு நிமிடத்தில் உங்கள் கார்ட் டவுன்லோட் செய்து யூஸ் செய்து கொள்ளவும்.

ஆதார் கார்டு திருத்தம் செய்ய

நியூ ஆதார் கார்டு அப்ளை ஆன்லைன் இன் தமிழ்நாடு

படி 1

Myaadhar இணையத்தளம் வாயிலாக சென்று உங்கள் ஆதார் நம்பர் என்டர் செய்யவும் 


படி 2

அப்படி செய்த உடன் ஆறு இலக்க எண்களும் அதில் உள்ளீட்டு பதிவிறக்கம் அல்லது பி வி சி என்பதில் ஏதாவது ஒன்றை செலக்ட் செய்யவும்


படி 3

இதில் பி வி சி அட்டையை தேர்வு செய்தால் ஐம்பது ரூபாய் கட்டணங்கள் செலுத்தினால் ஐந்து அல்லது பதினைந்து நாட்களுக்குள் இந்தியா போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும் 


படி 4

ஒருவேளை 90 நாட்களுக்குள் உங்கள் அட்டை உங்கள் முகவரிக்கு வரவில்லை என்றால் இந்தியா போஸ்ட் வழியாக கம்பளைண்ட் செய்தால் உங்களுக்கு மறுபடியும் ஒரு கோரிக்கை விடுத்து உங்கள் கார்ட் வந்து சேரும்.

ஆதார் அட்டை நிலவரம்