ஆதார் கார்டு மிஸ்ஸிங்

ஆதார் கார்டு மிஸ்ஸிங் - தற்போது மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாக இந்த ஆதார் அட்டை உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் பள்ளி முதல் வேலை வரை நாம் கட்டாயமாக ஆதார் கார்டு கொடுத்து வருகின்றோம். ஒரு சில நேரத்தில் ஆதார் கார்டில் இருக்கின்ற எண்கள் மட்டுமே போதுமானது. ஆனால் 90 சதவீதம் நாம் ஆதார் அட்டையை காண்பித்தே ஆக வேண்டும். அது நகலாக இருந்தாலும் சரி அல்லது அசலாக இருந்தாலும் சரி.

ஆதார் கார்டு மிஸ்ஸிங்


ஆதார் அட்டையை இது வரையும் நகல் எடுக்கவில்லை அல்லது எடுத்த நகலும் தொலைந்துவிட்டது இப்போது என்ன செய்ய வேண்டும். ஆதார் அட்டையை அனைத்து ஆவணங்களுடன் அரசாங்கம் இணைக்க சொல்கிறது. அந்த வகையில் நிச்சயமாக வங்கி கணக்கு தொடங்க, பான் மற்றும் வாக்காளர் அட்டையில் இணைத்திருப்போம். வங்கி கணக்கு புத்தகத்தில் நிச்சயம் உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கும்.

இதையும் படிக்க: ஆதார் அட்டை முகவரி திருத்தம் செய்ய

வழிமுறைகள்

1. முதலில் Resident.Uidai.Gov.in வெப்சைட்ற்கு செல்லுங்கள்.

2. அதில் முதலில் இருக்கின்ற My aadhar தேர்வு செய்தால் Retrieve அண்ட் Lost card என்று இருக்கும். அதனை தேர்வு செய்ய வேண்டும்.

3. உங்கள் ஆதார் எண், கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ஏதாவது ஒன்றை என்டர் செய்தால் உங்கள் ஆதார் அட்டை காண்பிக்கும். அப்போது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: பான் கார்டு அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள்