-->
பசுமை வீடு திட்டம் 2022 விண்ணப்பம் PDF

பசுமை வீடு திட்டம் 2022 விண்ணப்பம் PDF

பசுமை வீடு திட்டம் 2022 விண்ணப்பம் Pdf - பசுமை வீடு என்பது வீடு இல்லாமல் நிலம் வைத்திருக்கும் மக்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் நபர்களுக்கு இலவசமாக கட்டி தரும் வீடு பசுமை வீடு திட்டம் எனப்படும். இத்திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் பயன் அடைந்தனர். கட்டுமான வசதி கொண்ட சூரிய மின்சக்தி மற்றும் சோலார் வீடு தமிழக அரசு வழங்குகிறது. வீடு கட்ட ஆகும் செலவு என்று பார்த்தால் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரையும் ஆகலாம். இந்த கணக்கீடுகள் எல்லாம் நீங்கள் உங்கள் பசுமை வீட்டை கட்டுவது பொறுத்தே ஆகும்.

பசுமை வீடு திட்டம் 2022 விண்ணப்பம்


மோடி வீடு திட்டம் 2022

வீடு வேண்டி விண்ணப்பம்

பசுமை வீடு அளவுகள் மற்றும் மேப் 

300 சதுர அடி கொண்ட இடங்களில் தான் வீடு கட்ட வேண்டும். அதற்கு மேல் குறைவோ அதிகமாகவோ இருத்தல் கூடாது. வேண்டுமென்றால் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு மேல் வீட்டை மேம்படுத்தலாம். தமிழக அரசு கட்டுமான கட்டிடங்களுக்கு ரூபாய் 1, 80, 000 லிருந்து 2, 10, 000 வரையும் வழங்குகிறது. ரூபாய் 30, 000 சூரிய மின்சக்திக்கு அரசாங்கம் பணத்தை தருகின்றது. இதனை உங்கள் சொந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் தான் அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்ய உங்கள் ஊரில் உள்ள பஞ்சாயத்தை அணுகினால் அவர்கள் ஒரு படிவத்தை கொடுப்பார்கள். அதனை நீங்கள் பூர்த்தி செய்தால் அதனை மாவட்ட கலெக்டர் இடம் கொண்டு செல்வார்கள். அவர்கள் தான் ஆர்டர் காபியை தருவார்கள். 

கம்பி 350 கிலோவும், சிமெண்ட் மூட்டை 150 தருவார்கள். அதனை வைத்து நீங்கள் வேலையை ஸ்டார்ட் செய்யுங்கள். மேலும் தமிழக அரசு மூன்று பில்கள் கொடுப்பார்கள் அவை பேஸ், கான்கிரீட் மற்றும் பூசு வேலை. முக்கியமாக கட்டுகின்ற நிலம் பெயர் சரியானதாக இருக்க வேண்டும். பட்டா பத்திரம் ஆகியவைகள் எல்லாம் ஒரே பெயரிலும் வில்லங்கமும் இருக்க கூடாது. ஒருவேளை வில்லங்கம் இருந்தால் அதனை கிளியர் செய்து பிறகு இந்த பசுமை வீட்டிற்கு அப்ளை செய்யுங்கள்.

பிரதமரின் இலவச வீடு திட்டம் 2022 விண்ணப்பம்

சிறு குறு விவசாயி மானியம் 6000

இலவச வீட்டு மனை பெறுவது எப்படி

இலவச வீட்டு மனை விண்ணப்பம் 2022