பட்டா மாறுதல் செய்ய எளிய வழி online

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி முறை சட்டம் online - பட்டா மாறுதல் என்பது பட்டா பெயர் வேறு ஒருவர் பெயரில் இருக்கும். அந்த பெயரை மாற்றுவது மாறுதல் என்றும் சொல்லலாம். பட்டா மாறுதல் செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த பக்கத்தில் விவரமாக காணலாம். நாம் நேரடியாக பட்டா மாறுதல் செய்ய ஆன்லைனில் முடியாது. அதற்கான அக்சஸ் இ சேவை மையத்தில் தான் உள்ளது. முதலில் உங்களுடைய நிலம் மற்றும் சர்வே எண்கள் எந்த நிலையில் உள்ளது என்று பார்த்துவிட்டு பிறகு அப்ளை செய்யவும். தற்போது தமிழ் நிலம் மூலம் நாம் அப்ளை செய்யும் வசதி இருந்தாலும் அதனை இ சேவை மையத்தில் வேலை செய்யும் நபர்கள் மிகச்சரியாக அப்ளை செய்வார்கள். இதற்கு கட்டணமாக மற்ற சான்றிதழை போல 60 ரூபாய் மட்டுமே வசூல் செய்யப்படும்.

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி


உதாரணமாக ஒரே சர்வே நம்பர் இருந்தால் Non Involving சப் டிவிசன் என்று பொருள். அதாவது நீங்கள் ஒரு நிலம் வாங்கி இருந்தால் அது ஒரே சர்வே நம்பர் மட்டுமே இருக்கும். மொத்தமாக நீங்கள் வாங்கி இருந்தால் 100/1 என்று இருக்கும். மேலே சொன்ன 100/1 சர்வே நம்பர் எடுத்துக்காட்டு மட்டும் தான். அதை பயன்படுத்தி இ சேவை மையத்திற்கு சென்று வில்லங்க சான்று, ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, பத்திரம் மற்றும் அவர்கள் சொல்லும் ஆவணங்களை எடுத்து செல்லுங்கள். அவர்கள் அப்ளை செய்த உடன் VAO அவர்களிடம் சென்று பிறகு தாசில்தார் மேற்பார்வையிட்டு பட்டா வழங்குவார்.

இதையும் படிக்க: பட்டா நகல் பெறுவது எப்படி

உங்களுக்கு எந்த ஒரு message யும் வராது. நீங்கள் நேரடியாக பட்டா நம்பர் மற்றும் சர்வே நம்பர் யை பயன்படுத்தி ஆன்லைன் இல் பார்க்கலாம். ஒருவேளை மாற்றி இருந்தால் பட்டா பெயர் ஆட்டோமேட்டிக் காக மாறி இருக்கும்.

ஒரு நிலத்தின் சர்வே உட்பிரிவு எண் ஏகப்பட்டதாக இருந்தால் அது non involving என்று அழைக்கப்படும். அதாவது ஒரு சர்வே நம்பர் இல் இரண்டு அல்லது மூன்று உட்பிரிவு எண்கள் காணப்படும். ஒரே நிலத்தை 10 சென்ட், 20 சென்ட் என்று தனித்தனியாக பிரித்து இருப்பார்கள். அப்போது தனி பட்டாவாக உங்கள் நிலத்தின் மாறுதல் செய்ய நேரிடும். மேலும் இதனை நாம் லேண்ட் சர்வேயர் கொண்டு தான் அப்ளை செய்ய முடியும். ஏனென்றால் மொத்தமாக உங்கள் நிலம் இருந்தால் பரவாயில்லை. அதனால் லேண்ட் சர்வேயர் கொண்டு தான் அப்ளை செய்யணும்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி

குறிப்பு 

முடிந்த வரையில் ஆன்லைனில் நீங்களே அப்ளை செய்யாதீர்கள். அருகில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற இ சேவை மையம் சென்று பட்டா மாறுதல் செய்யுங்கள்.

பட்டா சிட்டா

வில்லங்கம் போடுவது எப்படி

இரண்டாம் நிலை வாரிசு என்றால் என்ன

வாரிசு பட்டா மாறுதல்