வாரிசு பட்டா மாறுதல்

வாரிசு பட்டா மாறுதல் -  வாரிசு என்பது தனது பிள்ளைகளும் மற்றும் பிள்ளைகளின் மகன்கள் மற்றும் மகள்களும் ஆவர். இது வாரிசுரிமை அடிப்படையில் செயல்படும் என்று சட்டம் அரசாணையை பிறப்பித்தது. வாரிசு அடிப்படையில் உயில் எழுதாமல் போனால் மகன்கள் மற்றும் மகள்களுக்கு சொத்து போய் சேரும்.

மேலும் அதை எவ்வாறு பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். மொத்தமாக இரண்டு வழிகள் உள்ளது. அதில் முதலொன்று கூட்டு பட்டா மற்றொன்று பாக பிரிவினை. ஒருவேளை ஒரே ஒரு வாரிசு தான் என்றால் பாக பிரிவினை செய்ய தேவை இல்லை. மூன்று நான்கு வாரிசுகள் இருப்பின் பாக பிரிவினை அல்லது கூட்டு பட்டா வாக மாற்றி கொள்ளலாம்.

வாரிசு பட்டா மாறுதல்


கூட்டு பட்டா அனைவரும் பெயரும் நிலமும் இருக்கும். அதனால் தனி பட்டாவாக மாற்றி கொள்ளலாம். ஏனென்றால் தனியே தனியே நிலங்கள் சர்வே உட்பிரிவு எண்கள் இருக்கும்.

பாகப்பிரிவினை செய்யும்போது சம பாகமாய் பிரித்தல் மிகவும் நல்லது. ஏனென்றால் இவருக்கு அதிகம் அவருக்கு குறைவு என்ற கேள்விகள் சண்டைகள் வரும். வேண்டாமென்றால் விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து விட சொல்லுங்கள்.

வாரிசு பட்டா மாறுதல் செய்வது எப்படி?

1. இதை ஆங்கிலத்தில் பட்டா transfer என்றும் கூட சொல்லலாம்.

2. இரண்டிற்குமே இ சேவை மையம் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

3. அதற்க்கு கட்டணம் 60 ரூபாய் வசூலிக்க படும்.

4. அப்ளை செய்த பின்னர் ஒப்புகை சீட்டு ஒன்று தருவார்கள்.

வாரிசு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் 

வாரிசு சான்றிதழ் நகல் பெறுவது எப்படி 

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு

Fb பேஜ்