சப் டிவிஷன் என்றால் என்ன

சப் டிவிஷன் என்றால் என்ன ( Subdivision என்றால் என்ன ) - சப் டிவிஷன் என்பது புல உட்பிரிவு எண் ஆகும். அதாவது ஒரு சர்வே நம்பரில் இருக்கும் மொத்த நிலத்தின் பரப்பானது சிறு சிறு பரப்பு பிரிக்கப்பட்டிருக்கும். பிரிக்கப்படும் சிறு சிறு பரப்புகள் சப் டிவிஷன் எண் எனப்படும். 

சப் டிவிஷன் என்றால் என்ன


எடுத்துக்காட்டாக,

ஒருவர் அவர் சொந்த ஊரில் ஒரு நிலத்தை வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். அதற்கு பட்டா, சிட்டா, அடங்கல், சர்வே நம்பர் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த இடம் 100 சென்ட் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அதை அவர் விற்பனை செய்கிறார் என்றால் அந்த 100 சென்ட் லிருந்து தான் கொடுக்க வேண்டும். அவர் 50 சென்ட் யை விற்கும் பட்சத்தில் அந்த லேண்ட் உட்பிரிவு எண் புதிதாக சேர்க்கப்படும்.

இதையும் காண்க: தோராய பட்டா என்றால் என்ன

உதாரணமாக அந்த லேண்டின் சர்வே நம்பர் 10/2 என்று வைத்து கொள்வோம். இப்போது அந்த சர்வே நம்பர் யும் சேர்த்து 10/2A மற்றும் 10/2B என இரண்டு நில பகுதிகளாக இருக்கும். இதேபோல் அந்த இரண்டு நில பகுதிகளில் ஒரு நில பகுதி பாதியளவு விற்க முயன்றால் அதிலும் இதே போல தான் உட்பிரிவு எண் உண்டாகும். மேலும் அதனை தனி பட்டாவாக மாறும்.

பிழைத்திருத்தல் பத்திரம்

மூல பத்திரம் என்றால் என்ன

நில அனுபவ சான்றிதழ் மாதிரி