-->
தோராய பட்டா என்றால் என்ன

தோராய பட்டா என்றால் என்ன

தோராய பட்டா என்றால் என்ன மனைவரி பட்டா எண் மற்றும் படிவம் 4 மனைவரி தோராய பட்டா - பட்டாவில் இதுவும் ஒரு வகையாகும். இந்த வார்த்தையிலேயே தோராயம் என்று இருக்கிறது. மிகவும் துல்லியமான சரியான பட்டாவை தான் நாம் தூய பட்டா என்போம். அதாவது எந்த வித பிழை இல்லாமல் சரியான நில அளவை செய்து இருப்பது தூய பட்டா ஆகும்.

தோராய பட்டா என்றால் என்ன


தோராயம் என்பது ஒரு சரியான அளவை கிடையாது. அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நத்தம் அளவை செய்திருக்கும். கூடுதலாக ஏக்கர் கணக்கிலும் நத்தம் புறம்போக்குகளாக அரசாங்கம் அமைத்திருக்கும். இதில் நிலம் இல்லாதவர்களுக்கும் அல்லது அனுபவ முறையில் வசித்து கொண்டு இருக்கும் மக்களுக்கும் அந்த இடத்தில் ஒவ்வொருவருக்கும் பட்டாவை கொடுக்கும். அந்த பட்டா தான் தோராய பட்டா ஆகும்.

இதையும் படிக்க: veetu vari online payment

நில சர்வேயரை கொண்டு ஒரு நிலங்களாக அல்லது வீட்டு மனைகளாக அளந்து ஒவ்வொருவருக்கும் பட்டாக்களை கொடுப்பர். அதில் ஏதாவது தவறுகள் இருப்பின் தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டும். ஆனால் 45 நாட்களுக்குள் அதனை செய்தால் மட்டுமே மாற்றப்படும்.

இதையும் படிக்க: வில்லங்கம் பார்ப்பது எப்படி

கொடுக்கப்படும் தோராய பட்டாக்களில் நில உரிமையாளர் பெயர், தந்தை பெயர், தீர்வை, அளவுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். இங்கு அளவுகள் சதுர மீட்டரில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

இதையும் படிக்க: Eservices.tn.gov.in Patta Chitta