வில்லங்கம் பார்ப்பது எப்படி

வில்லங்கம் பார்ப்பது எப்படி ஆன்லைனில் ( வில்லங்க சான்று பார்ப்பது எப்படி ) - வில்லங்கம் என்றால் ஏதோ தீங்கு இருக்கிறது என்று  நினைக்க வேண்டாம். வில்லங்கம் என்பதனை சான்றளிப்பட்ட நகல் என்றும் கூறலாம். இதனை ஆங்கிலத்தில் EC என்றும் அழைப்பார்கள். யாராவது ஒருவர் ஒரு புதிய நிலம் வாங்குகிறார் என்றால் அந்த இடத்திற்கு EC செக் செய்தீர்களாக என்று கேட்பார்கள். ஆனால் அதனை சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

வில்லங்கம் பார்ப்பது எப்படி


வில்லங்கம் என்பது ஒரு சொத்து பரிமாற்றம் ஆகும். ஆங்கிலத்தில் Property transactions என்றும் அழைக்கலாம். ஒரு குறிப்பிட்ட சொத்தை நாம் வாங்கும் முன்னர் அந்த சொத்தானது முதலில் யாரிடம் இருந்தது. இப்போது யார் பெயரில் இருக்கிறது மற்றும் அடமானம் உள்ளதா அல்லது அதனை வைத்து லோன் வாங்கி இருக்கிறீர்களா என அனைத்தும் அதில் அடங்கி இருக்கும். இதனை தான் வில்லங்கம் என்பர்.

இதையும் காண்க: EC Patta

எப்படி நாம் பட்டா சிட்டாவை காண eservices வெப்சைட் செல்கிறோமோ அதேபோல் Tnreginet. gov. in என்கிற இணையத்தளத்தில் சென்றால் வில்லங்க சான்றிதழை பார்க்கலாம்.

ஆன்லைனில் வில்லங்கம் பார்ப்பது எப்படி

1. Tnreginet இணையத்தளம் செல்ல வேண்டும்.

2. இணையதளத்தில் கீழே வில்லங்கச் சான்றிதழை தேடுக/பார்வையிடுதல் என்பதை செக் செய்ய வேண்டும்.

3. மண்டலம், ஆவண எண் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு எண் இவற்றில் உங்களுக்கு எது சௌகரியமோ அதனை சூஸ் செய்தால் உங்களுக்கான ஈசி வந்துவிடும்.

இதையும் படிக்க: Tamilnilam