-->
பிரதமரின் இலவச வீடு திட்டம் 2021 விண்ணப்பம் PDF

பிரதமரின் இலவச வீடு திட்டம் 2021 விண்ணப்பம் PDF

பிரதமரின் இலவச வீடு திட்டம் 2021 விண்ணப்பம் PDF - இந்த இலவச திட்டத்தை தகுதி இருக்கும் நபர்கள் அனைவரும் அப்ளை செய்யலாம். இத்தகைய திட்டம் வீடு இல்லாத மக்கள் பயன் பெறவே இத்தகைய திட்டம் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் திட்டம் 2022 மார்ச் யோடு நிறைவடைகிறது. இதற்காக மத்திய அரசு ரூபாய் 2, 30, 000 முதல் 2, 67, 000 வரை பணம் தருகிறது. இதனை PMAY என்றும் கூட நாம் அழைக்கலாம்.

வீடு கட்ட மானியம் பெறுவது எப்படி


1. 3 லட்சம் வருமானம் கொண்டவர்களுக்கு 30 சதுர மீட்டர் கார்பெட் பகுதி இருந்தால் அவர்களுக்கு 2, 67, 000 வழங்குவார்கள்.

2. 3 லட்சம் லிருந்து 6 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு 60 சதுர மீட்டர் கார்பெட் பகுதி இருந்தால் அவர்களுக்கு 2, 67, 000 வழங்கும்.

3. 6 லட்சம் லிருந்து 12 லட்சம் வரை வருமானம் உடையவர்கள் 160 சதுர மீட்டர் கார்பெட் பகுதி இருந்தால் 2, 35, 000 வரை பணம் கிடைக்கும்.

4. 12 லட்சம் லிருந்து 18 லட்சம் வரை வருமானம் கொண்டவர்கள் 200 சதுர மீட்டர் கார்பெட் பகுதி இருந்தால் 2, 30, 000 வரை பணம் வழங்குவார்கள்.

மேலே உள்ள வருமானம் கொண்டவர்கள் தான் இந்த திட்டத்திற்கு தகுதி ஆனவர்கள். மற்றும் ஏற்கனவே Property வைத்திருப்பவர்கள், பசுமை வீடு வாங்கியவர்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் இருந்தால் இந்த திட்டம் கிடைக்காது.

என்னென்ன Documents கள் தேவை 

1. வருமான சான்றிதழ் 

2. ஆதார் அட்டை 

3. அட்ரஸ் ப்ரூப் 

4. Salary slip 

5. குடும்ப உறுப்பினர்கள் விவரங்கள்

6. இடத்தின் விவரங்கள் 

7. லோன் சாங்க்ஷன் லெட்டர் (உங்களுடைய ஊரில் உள்ள அலுவலகத்தில் லெட்டர் போஸ்ட் செய்வார்கள். நீங்கள் அவ்வப்போது சென்று பார்க்கவும்.)

நீங்கள் Online மற்றும் Offline இரண்டுமே அப்ளை செய்யலாம். அது உங்கள் விருப்பம். நேரிடையாக நீங்கள் அப்ளை செய்ய நினைத்தால் பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா விண்ணப்பம்

இலவச வீட்டு மனை பெறுவது எப்படி

இலவச வீட்டு மனை விண்ணப்பம் Pdf