-->
சிறு குறு விவசாயி என்றால் என்ன

சிறு குறு விவசாயி என்றால் என்ன

சிறு குறு விவசாயி என்றால் என்ன status யார் பயன்கள் -  சிறு குறு விவசாயிகள் யார், அதன் பயன்கள் மானியம் 6000 மற்றும் இதர விவரங்களை கீழே காண்போம்.

1. சிறு விவசாயிகள் - நஞ்சை நிலம் 2.5 ஏக்கர் அல்லது புஞ்சை 5 ஏக்கர்

2. குறு விவசாயிகள் - நஞ்சை நிலம் 1.25 ஏக்கர் அல்லது புஞ்சை 2.5 ஏக்கர் 

மேலே கூறிய நிலங்களை வைத்திருப்போர் சிறு குறு விவசாயிகளாக கருதப்படுகின்றனர். இதில் நஞ்சை நிலம் என்பது அரசாங்கம் பாசன வசதி ஏற்படுத்தி தருவது  ஆகும்.புஞ்சை நிலம் என்பது நிலத்தடி நீரையும் மழைநீரையும் நம்பி இருப்பது புஞ்சை நிலம் ஆகும். இதை உழவர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.

விவசாய டிராக்டர் மானியம் 2022

சிறு குறு விவசாயி என்றால் என்ன

இதில் அதிகமாக நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு பெறு விவசாயிகள் என கருதப்படுவர்.

சிறு குறு விவசாயி சான்றிதழ் பெறுவது எப்படி

தனியார் மற்றும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட இ சேவை மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். இதற்காக ரூபாய் 60 பெற படுகிறது. நீங்கள் ஆவணங்களாக புகைப்படம், ஸ்மார்ட் கார்டு, நிலவரைபடம் Fmb, நிலத்தின் புகைப்படம் xerox, EC, கணினி சிட்டா, அடங்கல் சான்று, ஆதார் அட்டை இவையெல்லாம் எடுத்து கொண்டு அப்ளை செய்யுங்கள்.

செய்த பின்னர் உங்கள் மொபைலுக்கு பன்னிரண்டு எண் கொண்ட Acknowledgement வரும். அல்லது உங்களிடம் ஒரு ஒப்புகை சீட்டு ஒன்று தருவார்கள். ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து அந்த நம்பர் யை Tnedistrict என்கிற இணையத்தளத்தில் போடவும். அதில் status காட்டும். தற்போது யாரிடம் உள்ளது உதாரணமாக RI, VAO மற்றும் தாசில்தார் யாரிடம் இருக்கிறது என்று எக்ஸாக்ட் ஆக காட்டி விடும்.

இதனை வருவாய்த்துறை இன் கீழ் செயல்படுகிறது. மேலும் இந்த சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆறு மாதங்கள் மட்டுமே செயல்படும். அதற்குப்பிறகு காலாவதி ஆகி விடும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வருமான சான்றிதழ் மாதிரி அப்ளை செய்ய வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் உங்கள் வசிப்பிடம் அல்லாமல் வேறு ஒரு ஊரில் தான் விவசாய நிலம் செய்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் ஊரில் நிலங்கள் இல்லை என்று NOC வாங்க வேண்டும்.

சிறு குறு விவசாயி மானியம் 6000

இத்தகைய விவசாயிகளுக்கு ரூபாய் 6000 வழங்கப்படுகிறது. மேலும் அது மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு ரூபாய் 2000 வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. சிறு குறு விவசாயி 6000 உதவித்தொகை

பட்டா சிட்டா