சிறு குறு விவசாயி மானியம் 6000

சிறு குறு விவசாயி மானியம் 6000 ( siru kuru vivassayi maniyam ) - சிறு குறு விவசாயிக்கு வருடந்தோறும் ரூபாய் 6000 மானியமாக வழங்கப்படுகிறது. இதனை மத்திய அரசு விவசாயிகள் பயன் பெரும் வகையில் அளித்து வருகிறது. மேலும் இந்த உதவித்தொகை மூன்று தவணைகளாக ரூபாய் 2000 வீதம் கொடுக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் VAO அலுவலகத்தில் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் விண்ணப்பத்தில் என்னென்ன ஆவணங்கள் மற்றும் விவரங்கள் அடங்கி இருக்கும் என்பதை கீழே காண்போம்.

சிறு குறு விவசாயி மானியம் 6000


ஆவணங்கள் மற்றும் விவரங்கள்

1. வட்டம் 

2. கிராமம் 

3. பெயர் 

4. தந்தை அல்லது கணவர் பெயர் 

5. பிறந்த தேதி 

6. ஆண் அல்லது பெண் 

7. வகுப்பு 

8. தொழில் 

9. வருமான வரி செலுத்துபவரா 

10. அரசு ஓய்வூதியம் பெறுபவரா (முதியோர் உதவித்தொகை)

11. ஆதார் எண் 

12. கணினி பட்டா சிட்டா 

13. தொலைபேசி நம்பர் 

14. நிலத்தின் வகை (நஞ்சை அல்லது புஞ்சை)

15. நிலத்தின் பரப்பளவு 

16. பட்டா எண் 

17. வங்கி கணக்கு எண் மற்றும் விவரங்கள் 

18. புதிய ரேஷன் கார்டு 

குறிப்பு 

இதில் பயன் பெரும் விவசாயிகள் 5 ஏக்கர் நிலங்களுக்குள் இருப்பவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும். அரசு வேலையில் இருப்பவர்கள் இதற்காக விண்ணப்பிக்க கூடாது.

இந்த விவரங்களை எல்லாம் பூர்த்தி செய்து விட்டு நீங்கள் VAO இடம் சென்று கொடுத்து விடுங்கள். அந்த உதவித்தொகை கூடிய விரைவில் வந்து சேர்ந்துவிடும் . இல்லையென்றால் நீங்கள் VAO அலுவலகரிடம் சென்று விசாரியுங்கள்.

உழவர் அட்டை பெறுவது எப்படி

S3waas