கணினி சிட்டா பெறுவது எப்படி

கணினி சிட்டா  பெறுவது எப்படி - சிட்டா என்பது ஒருவருடைய நிலத்தின் உரிமை,  பரப்பளவு, வரி, சர்வே எண்கள், உட்பிரிவு எண்கள் என்று வருவாய்த்துறை சான்று அளிப்பதாகும். இதை தமிழ்நாடு அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு பட்டா மற்றும் சிட்டாவுக்கான இணையதளத்தை வெளியிட்டது. இதனால் மக்களும் எந்த வித கட்டணங்களும் இல்லாமல் பெற்று கொள்ள முடியும். பட்டா என்பது நீங்கள் நேரடியாக பெற்று அல்லது மொத்த விவரமும் அடங்கிய ஒரு நிலத்தை உங்களிடம் இருப்பதாகும்.

கணினி சிட்டா  பெறுவது எப்படி


சிட்டா என்பது அப்படி இல்லாமல் உங்கள் ஊர் அல்லது வருவாய் கிராமங்களின் ஒட்டுமொத்த பட்டா உரிமையாளர்களின் தொகுப்பே ஆகும். இரண்டுமே ஒன்று தான் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பட்டாவில் என்ன இருக்கிறதோ அதேபோல் தான் சிட்டாவில் காணப்படும். ஆனால் சிட்டாவை தற்போது இணையத்தளத்தில் நாம் பெற வழி இல்லை.

இதற்கு கிராம நிர்வாக அதிகாரி அவர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கிராமங்களின் அனைத்து சிட்டாக்களையும் பதிவேடுகளில் சேகரிப்பார். அதாவது அகரவரிசைப்படியோ அல்லது புல எண்களின் அடிப்படையிலோ ஒவ்வொரு நிலத்தின் சிட்டாக்களை அதாவது பட்டாக்களை பதிவேடுகளாக சேகரிப்பார். அது மட்டுமில்லாமல் அதில் பெயர் மாற்றம், பழைய பட்டா யாரிடம் இருந்தது, தற்போது யார் அனுபவத்தில் உள்ளது என ஒவ்வொரு விஷயங்களையும் சேகரித்து கொண்டே இருப்பார். இந்த பதிவேட்டினை எதற்காக சேகரிப்பார் என்றால் பட்டாவில் யாராவது குளறுபடி செய்தால் அதனை தடுக்கவும் மற்றும் எவ்வளவு நிலங்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளார்கள் என கண்டுபிடிக்கவும் தேவைப்படுகிறது.

குறிப்பு

இதனை ஆன்லைனில் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் மொத்த பட்டாக்களின் தொகுப்பு எடுக்க முடியாது.

பட்டா வாங்குவது எப்படி 

பட்டா மாற்றம் விண்ணப்பம் 

பதிவுத்துறை EC