பொது அதிகார ஆவணம் மாதிரி

பொது அதிகார ஆவணம் மாதிரி - பொது அதிகாரம் என்பது தனது சொத்தை பராமரிக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் ஒரு பவர் ஏஜென்ட் யை நியமிப்பது ஆகும். அதாவது நிலம் மற்றும் சொத்து உரிமையாளர் முதன்மையாளர் என்றும் அதனை நிர்வகிப்பவர் முகவர் என்றும் அழைப்போம்.

முதன்மையாளர் வெளிநாட்டில் அல்லது மிகுந்த வேலை பளு காரணமாக தன்னால் அனுபவிக்க மற்றும் பார்த்துக்க முடியவில்லை பட்சத்தில் அவர் ஒரு ஏஜென்ட் யை நியமிப்பார். அந்த ஏஜென்ட் அவருடைய சொத்தை பார்த்து கொள்வார். இதற்காக அந்த ஏஜென்ட் பணம் பெற கூடாது என்று அந்த பவர் பத்திரத்தில் எழுதி இருக்க வேண்டும்.

பொது அதிகார ஆவணம் மாதிரி


முதன்மையாளர் அவர் சொத்துக்கான உரிமைகளை அதில் சுட்டி காட்டி இருக்க வேண்டும். இதனை விற்பனை மற்றும் இதர உரிமைகள் அந்த முகவருக்கு உள்ளது என்றும் கூறி இருக்க வேண்டும். அது கட்டாயம்மில்லை. முதன்மையாளர் முடியாத பட்சத்தில் அதில்சொல்ல வேண்டும். மேலும் அதனை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அதற்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணங்களை செலுத்தி இருக்க வேண்டும்.முக்கியமாக முதன்மையாளர் மிகவும் நம்பிக்கையான நபரேயே அதில் நியமிக்க வேண்டும். ஒருவேளை 

முதன்மையாளர் அனைத்து விதமான உரிமைகளை முகவருக்கு கொடுத்தார் என்றால் அவருக்கு தெரியாமல் இவர் வேறு ஒரு நபருக்கு கிரையம் செய்தார் என்றால் அது பிரச்சினையே. ஆனால் முதன்மையாளர் அந்த பவர் பத்திரத்தை எளிதாக ரத்து செய்ய முடியும்.

ஏனென்றால் சுற்றரிக்கையில் பவர் எழுதி கொடுத்தவர் அதனை ரத்து செய்ய முடியும் என்று சொல்கிறது. பிறகு அவர் RDO விடம் மனு கொடுத்து அந்த பழைய பத்திரத்தை மீட்டெடுக்கலாம்.

முத்திரைத்தாள் கட்டணம் 

விக்கிரைய பத்திரம்

பொது அதிகார பத்திரம்

Fb பேஜ்