-->
கிரைய பத்திரம் என்றால் என்ன

கிரைய பத்திரம் என்றால் என்ன

கிரைய பத்திரம் என்றால் என்ன - கிரையம் என்பது நிலம் அல்லது மனையை மற்றொருவரிடம் விற்பனை செய்து ஒப்பந்தம் போட்டு கொள்வது ஆகும். அதற்கு முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தி சார் பதிவாளர் அலுவலகத்தில் தகுந்த சாட்சிகளுடன் முன்னிலையில் பதியப்படுவது கிரைய பத்திரம் என்பர்.

கிரையம் எழுதி கொடுப்பவர் அவர் பெயர் Initial அட்ரஸ் அடையாள அட்டை மற்றும் சாட்சிகளின் அடையாள அட்டை பெயர் Initial மற்றும் அட்ரஸ் இவை அனைத்தும் எழுதும்போது கவனம் கொள்வது அவசியம். மேலும் அதனை யாருக்கு எழுதி கொடுக்க போகிறார் என்று அதனையும் அதில் சுட்டி காட்ட வேண்டும்.

கிரைய பத்திரம் என்றால் என்ன


முக்கியமாக அந்த சொத்தானது வந்தது என்று அதில் சொல்லி இருக்க வேண்டும். அது பூர்வீக சொத்து, பரம்பரை சொத்து, பாகப்பிரிவினை சொத்து, தான பத்திரம் மற்றும் செட்டில்மென்ட் இதில் எந்த வகையென்று அதில் சுட்டி காட்டுதல் அவசியம்.

பிறகு அதில் எந்த வில்லங்கமும் இருக்க கூடாது. பிற்காலத்தில் இவர் எழுதி கொடுத்த நிலம் சம்ந்தப்பட்ட பிரச்சனைகள் வருமே ஆனால் அதற்கு முழு பொறுப்பு அவரே என்று அதில் கூறி இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பக்கத்திலும் சாட்சிகள் மற்றும் நிலம் விற்பவர் கையெழுத்து கண்டிப்பாக இருக்க வேண்டும். இறுதியாக பட்டா நகல் மற்றும் அதன் நில வரைபடம் அதில் இணைக்க பட்டிருக்க வேண்டும்.

நிலத்தை வாங்க உள்ள நபர் இதனை சரிபார்த்த பின்னர் கையெழுத்து மற்றும் கிரயம் செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் . கிரையம் முடிந்த பின்னர் பட்டா பெயர் பெயர் மாற்றம் செய்து விடுங்கள்.

காணாமல் போன பத்திரம்

சொத்து பிரிப்பது எப்படி 

பாகப்பிரிவினை பத்திரம்

பட்டா சிட்டா

Fb பேஜ்