ஒரு இடத்தை வாங்கும் போது பெற வேண்டிய ஆவணங்கள்

ஒரு இடத்தை வாங்கும் போது பெற வேண்டிய ஆவணங்கள் - ஒரு காலியான இடம் வாங்க போகிறீர்கள் என்றால் அதற்கு என்னென்ன ஆவணங்கள் அல்லது என்னென்ன இருக்க வேண்டும் என்பதை சரியாக பார்க்க வேண்டும். 

1. முதலில் காலியான இடம் இருந்தால் அதன் எல்லைகள் எங்கு இருக்கிறது மற்றும் பக்கத்து நிலத்தின் எல்லைகள் எங்கு இருக்கின்றது என ஆராயவும்.

2. பக்கத்துக்கு நிலங்களும் நீங்கள் வாங்கப்போகும் நிலமும் சரியாக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் எல்லைகள் சரியாக இல்லை எனில் வரைபடம் பார்த்தல் அவசியம்.

3. எதற்கும் அ பதிவேடு நகலை வாங்கி சரிபார்க்கவும்.

4. பட்டாவின் பெயரும் தற்போது உங்களிடம் விற்கப்போகும் நபரின் பெயரும் சரியாக இருக்கிறதா என ஆராயவும்.

ஒரு இடத்தை வாங்கும் போது பெற வேண்டிய ஆவணங்கள்


5. மூல பத்திரம் சரிபார்க்கவும். அதிலும் விற்கப்போகும் நபரின் பெயரும் சரியாக இருக்கின்றதா என ஆராய வேண்டும். மேலும் அதற்கு இணை பத்திரங்கள் சரி பார்க்கவும்.

6. முக்கியமாக நிலவியல் பாதை, வண்டி பாதை மற்றும் பொது பாதை போன்றவைகள் உள்ளதா என பார்க்கவும். அப்படி இருந்தால் உங்கள் நிலத்தின் சில பகுதிகள் எப்போதாவது பொது நோக்கத்திற்காக அரசாங்கம் எடுத்து கொள்ளும்.

7. வில்லங்க சான்றிதழை கட்டாயம் பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் 30 வருடங்களாவது போட்டு பார்க்க வேண்டும்.

இதையும் பார்க்க: பாட்டி சொத்து யாருக்கு சொந்தம்

8. கூட்டு சொத்தாக இருந்தால் அனைவரிடமும் சம்மதம் பெற்ற பின்னர் தான் பதிவு செய்ய தயாராக இருக்க வேண்டும்.

9. சமீபத்தில் நிறைய போலியான ஆவணங்கள் தயார் செய்து அதனை விற்க முயல்கின்றனர். அதனால் ஒன்றுக்கு பத்து முறை செக் செய்து கொள்ளுங்கள்.

10. வீட்டு மனையா அல்லது விவசாய மனையா என பார்த்து கொள்ளுங்கள்.

11. அங்கீகாரம் பெற்ற மனையாகவும் அதற்கு வரியும் அவ்வப்போது செலுத்தியுள்ளதா என ஆராயவும்.

இதையும் பார்க்க: பூர்வீக சொத்து பட்டா மாற்றம்