போலி பதிவு ஆவணம் குறித்த rti தகவல்கள் PDF - பத்திரப்பதிவுத்துறையில் சமீபகாலமாக போலியான பத்திரம் தயாரித்து பதிவு செய்கின்றார்கள். உதாரணமாக போலியான பட்டா, வீட்டு வரி, தண்ணீர் வரி ரசீது என தயாரித்து போலியான பதிவினை செய்கிறார்கள்.
இதனை கட்டுப்படுத்தவே தமிழ்நாடு அரசாங்கம் அவ்வப்போது பதிவுத்துறை சார்பாக சுற்றறிக்கை வெளியிடுகிறது. இறுதியாக ஜனவரி மாதம் பதிவுத்துறை அரசாணையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அரசாணைகளை காண Tnreginet வெப்சைட்டில் சுற்றறிக்கை என்னும் navigation யை தேர்வு செய்தால் வரும்.
இதையும் படிக்க: தகவல் அறியும் உரிமை சட்டம் மாதிரி மனுக்கள் pdf
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் போலியாக பதிவு செய்கின்ற ஆவணம் குறித்த தகவல்களை நாம் பெறலாம். பொது தகவல் அலுவலர் மூலம் இந்த தகவல்களை நீங்கள் பெற முடியும். நீங்கள் செய்த மனு திருப்தி இல்லையென்றால் மேல் முறையிடு செய்யலாம்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: போலி ஆவணம்