-->
வில்லங்க சான்றுகளை இலவசமாக இணைய தளத்தில்

வில்லங்க சான்றுகளை இலவசமாக இணைய தளத்தில்

வில்லங்க சான்றுகளை இலவசமாக இணைய தளத்தில் - வில்லங்க சான்றிதழை முன்பு போல் இல்லாமல் ஒரே ஒரு நிமிடத்தில் எந்த வித கட்டணமுமும் செலுத்தாமல் ஆன்லைனில் எடுக்க முடியும். 2015 க்கு முன்னர் ஒரு இடத்தின் வில்லங்கம் பார்க்க வேண்டுமென்றால் பத்திர பதிவு அலுவலகம் சென்று பத்திர எண் குறிப்பிட்டால் மட்டுமே அந்த வில்லங்க சான்றிதழ்களை கொடுப்பார்கள். ஆனால் சிலருக்கு உடனே கிடைத்துவிடும். சிலர்க்கு கிடைக்காமல் கூட இருக்கலாம். இதனை கருத்தில் கொண்டு தான் அரசாங்கம் பட்டா நகல், விவரங்கள் மற்றும் வில்லங்கம் போன்றவைகள் எல்லாம் கணினிலே எடுத்து கொள்ள முடியும் என்றும் அதும் இப்போது வீட்டிலே இந்த சேவைகள் எல்லாம் பெற முடியும் அளவிற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

வில்லங்க சான்றுகளை இலவசமாக இணைய தளத்தில்


இந்த வில்லங்க செர்டிபிகேட் வைத்து நாம் அனைத்து விவரங்களையும் பார்க்க இயலும். இப்போது ஒருவர் உங்களுக்கு சொத்து கிரயம் செய்து கொடுக்கிறார் என்றால் அவரிடம் நீங்கள் முதலில் பெறும் ஆவணம் என்று பார்த்தால் தாய் பத்திரம் தான். ஆனால் அதற்கு பிறகு என்னென்ன முறையில் இந்த சொத்தை பரிமாற்றம் நடந்தது, யார் யார் பெயரில் இருந்து யார் யார் பெயருக்கு மாற்றியது, எத்தனை வருடங்கள் அனுபவித்து வந்தார்கள், நீதிமன்றம் ஒப்புதல் பெற்ற சான்றிதழா அல்லது வங்கி மூலம் பெறப்பட்ட MOTT எனப்படும் கடன்கள் முடிந்ததா என்று இந்த வில்லங்கத்தில் தான் பார்க்க முடியும்.

வில்லங்க சான்று Online

இவ்வளவு விஷயங்கள் அதில் அடங்கி இருக்கும். ஒருவேளை விற்கும் நபர் உங்களிடம் பொய் சொல்லி நேர்ந்தாலும் வில்லங்கத்தினை பார்த்தாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும். அதற்காக வில்லங்கத்தை மட்டுமே பார்த்து இடத்தினை வாங்க வேண்டும் என்பதிலை. முறையான ஆவணங்கள் சரிபார்த்து விட்டு பிறகு இடமோ அல்லது வீடோ வாங்குங்கள்.

நில வரைபடம் எடுப்பது எப்படி 

சிட்டா நகல் பெறுவது எப்படி

Tnreginet