EC வில்லங்க சான்று பார்க்க

EC வில்லங்க சான்று பார்க்க அல்லது சரிபார்க்க ( Ec villanga sandru ) - முதலில் EC மற்றும் வில்லங்கம் போன்றவை என்னென்ன என்று என்று பார்க்கலாம். இந்த இரண்டும் ஒன்றே தான். இவ்விரண்டும் வெவ்வேறு என்று  நினைத்துக்கொள்கிறார்கள். எந்த நிலத்தினையும் மனையினையும் நாம் EC போட்டு பார்க்கலாம். அதற்கு நிச்சயம் சர்வே எண் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஒருவேளை அதனை உட்பிரிவு செய்திருந்தால் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் இவை இரண்டுமே வேண்டும்.

EC வில்லங்க சான்று


சொத்தின் ஆவண எண், புல எண் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு எண் இவைகளை கொண்டு EC பார்க்கலாம். ஆவணம் முதலில் யாரிடம் இருந்து யாரிடம் இருந்து கைமாறியது அல்லது பரிமாற்றம் நடந்தது என ஒவ்வொன்றாக விவரமாக இந்த வில்லங்கத்தில் இருக்கும். இதற்கு முதல் வருடமாக ரூபாய் 10 கட்டணமாக வசூல் செய்யப்படும். பிறகு எடுக்கின்ற ஒவ்வொரு வருடங்களுக்கும் தலா 1 ரூபாய் கட்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: Villangam download

இதனால் சொத்து வாங்கும் நபர் மிகவும் கவனமாக இருக்கலாம். ஏனெனில் இதனை ஆன்லைனில் நாமே பார்க்கும் வசதியை தமிழ்நாடு அரசு Tnreginet வெப்சைட் மூலம் பதிவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. Udr காலங்களில் இருக்கின்ற சொத்தினை நாம் வில்லங்கம் பார்க்க முடியும். 1975 க்கு முன்னர் உள்ள நிலங்கள் நாம் ஆன்லைனில் பார்க்க முடியாது. மற்றபடி 1975 க்கு மேலே உள்ள காலங்களில் நம்மால் வில்லங்க சான்றிதழை எளிமையாக பார்க்கலாம். முதல் வருடத்திற்கு மட்டும் பத்து ரூபாய் மற்றும் ஒவ்வொரு வருடமும் பார்க்க தலா 1 ரூபாய் கட்ட நேரிடும்.

இதையும் படியுங்க: வில்லங்க சான்றிதழ் விண்ணப்ப படிவம்