சுவாதீனம் ஒப்படைப்பு என்றால் என்ன

சுவாதீனம் ஒப்படைப்பு என்றால் என்ன ( usufructuary mortgage in tamil ) மற்றும் சுவாதீனம் இல்லாத அடமானம் என்றால் என்ன - அடமான பத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். பொதுவாகவே கடன் கொடுப்பவர்கள் சொத்து பத்திரம் கேட்பது வழக்கம். ஏனெனில் பணத்திற்கு பதில் பத்திரம் சரியாக இருக்கும் என்பதற்காக பெரும்பாலானோர் இதனை கடைபிடிக்கின்றனர்.

சுவாதீனம் ஒப்படைப்பு என்றால் என்ன


சுவாதீனம் என்றால் சொத்தின் உரிமையை ஒப்படைப்பது என்பது அர்த்தம். அது நிலமாகவோ, வாடகை வீடாகவோ அல்லது வேறு எந்த சொத்தாக இருந்தாலும் அதன் உரிமையை கொடுப்பது ஆகும். அதாவது அனுபவத்தை விட்டு கொடுப்பதாகும்.

இதையும் பார்க்க: புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டலாமா

சுவாதீனம் பெற்ற நபர் அந்த சொத்தில் வருகின்ற மொத்த வருவாயும் எடுத்து கொள்ளலாம். கடன் வாங்கியவர் மாத வட்டி செலுத்த தேவையில்லை. அதற்கு பதிலாக அந்த சொத்தில் வருகின்ற வருவாயை கடன் கொடுப்பவர் எடுத்துக்கொள்ளலாம். இதற்கும் காலக்கெடு போட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

இதையும் பார்க்க: கூட்டு பட்டா பிரச்சனை

காலக்கெடு

முதலில் இதற்கு 30 ஆண்டுகள் வரை காலக்கெடு இருந்தது. அதற்குள் சம்பந்தப்பட்டவர் வாங்கிய பணத்தை கொடுத்து சொத்தினை வாங்கி கொள்ள வேண்டும். 30 ஆண்டுகள் முடிவடைந்தால் அந்த சொத்து கடன் வாங்கியவர்களுக்கு சென்று விடும்.

இதையும் பார்க்க: வில்லங்கம் பார்ப்பது எப்படி

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

27.04.2022 அன்று உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதில் இதற்கு காலக்கெடு எப்போதும் இல்லை என்றும் எப்போது வேண்டுமென்றாலும் மீட்டு கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

இதையும் பார்க்க: நில உச்சவரம்பு சட்டம்