புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டலாமா - அரசாங்கமானது தனிப்பட்ட முறையிலும் அல்லது பொது நோக்கத்திற்காகவும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளில் அல்லது நகர்ப்புறங்களில் ஒரு குறிப்பிட்ட இடங்களை ஒதுக்குவர். அதில் அரசாங்கம் ஏதாவது ஒரு கட்டடம் அல்லது திட்ட நோக்கத்திற்காக அந்த குறிப்பிட்ட இடங்களை எப்போது வேண்டுமென்றாலும் ஆக்கிரமிப்பு அல்லது எடுத்துக்கொள்வர்.
புறம்போக்கு நிலங்கள் ஏகப்பட்ட வகைகள் உண்டு. இதில் நத்தம் மட்டுமே மக்கள் வாழக்கூடிய அல்லது அரசாங்கம் இந்த வகை நிலத்தினை மட்டும் தான் மக்கள் வாழ்வதற்காக கொடுப்பர். மற்ற புறம்போக்கு நிலங்களை ஏதாவது ஒரு நோக்கத்திருக்காக பயன்படுத்தி கொள்வர்.
இதையும் படியுங்க: TamilNilam Patta
எடுத்துக்காட்டு
இப்போது ஒருவர் நத்தம் புறம்போக்கில் 30 ஆண்டுகள் மேல் வசித்து வருகின்றார். அதற்காக அவர் அனுபவ பாத்தியம் மூலம் பட்டா ஆவணம் பெறலாம். அந்த முப்பது வருடமும் அவர் வீடு, சொத்து, தண்ணீர், மின்சாரம் போன்ற வரிகள் கட்டிருப்பது அவசியம்.
இதையும் காண்க: Eservices.tn.gov.in
புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டலாமா அல்லது கட்டக்கூடாதா
புறம்போக்கு நிலம் என்றாலும் அதில் வகைப்பாடு ஒன்று உள்ளது. அந்த வகையில் நத்தம் மட்டுமே மக்கள் பயன்படுத்தலாம். ஆனால் அதற்குண்டான ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். மற்றப்படி, நீர்நிலை, மேய்ச்சல் மற்றும் மற்ற புறம்போக்கு நிலங்களில் கட்டக்கூடாது. அப்படியே கட்டினாலும் அந்த இடம் எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிப்புக்குள்ளாகும்.
இதையும் படிக்க: நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி