-->
நில உச்சவரம்பு சட்டம் 1958 1961 1970 1972 1983 2017

நில உச்சவரம்பு சட்டம் 1958 1961 1970 1972 1983 2017

நில உச்சவரம்பு சட்டம் 1958 1961 1970 1972 1983 2017 - அதிகமான நிலத்தை யார் யார் வைத்திருக்கிறார்களோ அவர்களிடம் இருந்து அரசாங்கம் கைப்பற்றி நிலம் இல்லாதவர்கள், விவசாயிகளிடம் கொடுப்பார்கள். இதன் முக்கியத்துவமே வேளாண்மை தான். பெரிய பெரிய ஜமீன்தாரர்கள், மிராசுதாரர்கள், வசதி படைத்தவர்கள் இடம் அதிகமான நிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளிடம் ஒப்படைத்தனர்.

நில உச்சவரம்பு சட்டம்


இதனால் மக்களும் மிகவும் பயனடைந்தனர். இந்த சட்டம் முதன்முதலில் மத்திய அரசு 1958 இல் உருவாக்கப்பட்டது. பிறகு அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான நில உச்சவரம்புச் சட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு விதமான சட்டத்தை பின்பற்றுகிறது.

உபரி நிலம் என்றால் என்ன

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு 1961 ஆம் ஆண்டு இந்த சட்டத்தை உருவாக்கியது. பிறகு 1970 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தி 1972 ஆம் ஆண்டில் ஒரு வீட்டில் ஐந்து (ஆறு ) பேர் கொண்ட உறுப்பினர்களுக்கு 15 தர ஏக்கர் வரையும் இருக்கலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் மற்ற வசதி பெற்றவர்கள் பெரிய பெரிய அறக்கட்டளைகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு கிரையம் செய்து அவர்களது நிலத்தை காப்பாற்றினார்கள். இருந்தாலும் கடுமையான போராட்டத்திற்கு பிறகு 1983 ஆம் ஆண்டில் சுமார் 1, 00, 000 க்கும் மேலான ஏக்கர்கள் அனைத்தும் பறிமுதல் செய்தனர். இதனை தான் உபரி நிலம் என்பர்.

நிலம் வேறு பெயர்கள்

2017 ஆம் ஆண்டு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் அந்தந்த பகுதிகளில் உள்ள அ பதிவேடுகளை சரிபார்த்து அதில் எந்தெந்த நிலங்கள் உடமைப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்கிற விவரங்களை சேகரிக்க உத்தரவு இட்டார். அதன்படி, வருவாய் கோட்டாட்சியரும் கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து உள்ளார்.

1 சதுரம் எத்தனை square feet