நிலம் வேறு பெயர்கள்

நிலம் வேறு பெயர்கள் - இதனை ஆங்கிலத்தில் Land என்று குறிப்பிடுவார்கள். நிலம் தற்போது உலகத்தில் இன்றியமையாது ஆகும். பூமி 29 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பு கொண்டுள்ளது. நிலம் என்பது பொதுவாகவே வீடுகள், வணிகம் சார்ந்த கட்டிடங்கள் என மக்கள் பயன்படுத்தும் முக்கியமான தேவைகளில் ஒன்றாகும். மக்கள் வீடுகளை கட்டி கொள்ளவும் அதில் வாழ்வதற்கும் இன்றி அமையாதது இந்த நிலம் ஆகும். மற்ற வணிகம் சார்ந்த கட்டிடங்கள் வியாபார நோக்கத்திற்காக கட்டப்படுகிறது.

நிலம் வேறு பெயர்கள்


நிலம் நீரை போல அல்ல. நீரானது ஓரிடத்தில் இருந்து ஓரிடத்திற்கு செல்லும் அல்லது உபயோகித்தால் பூமிக்கு சென்று விடும். ஆனால் நிலம் அப்படி இல்லாமல் ஓரிடத்தில் இருந்தால் அது காலம் வரையும் அப்படியே இருக்கும். இன்றைய கால கட்டத்தில் வசதி வாய்ந்தவர்கள் மேலும் நிலங்களை ரெஜிஸ்டர் செய்து கொள்கிறார்கள். காரணம் வீடுகள், வணிகம் மட்டுமல்ல விவசாயமும் ஆகும். அன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் நிலத்தை விவசாயம் செய்வது, குத்தகைக்கு விடுவது போன்ற தொழில்கள் செய்து வந்தனர். தற்போது அது பாதியளவு குறைந்துவிட்டது என்றே கூறலாம்.

எளிமை வேறு சொல்

நிலத்தின் வகைகள் 100 க்கு மேலே உள்ளது. உதாரணமாக மேய்ச்சல், கல்லாங்குத்து, புறம்போக்கு நிலம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதனை அந்த காலத்திலே சரியான வகைப்படுத்தி ஐந்து திணை நிலங்களாக வகைப்படுத்தினர். அவைகள் குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை மற்றும் மருதம் ஆகும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடம் மற்றும் நிலத்தின் தன்மையை பற்றி கூறும்.

கொடையாளர் வேறு சொல்

நிலம் வேறு சொல் அல்லது சொற்கள்

1. பூமி

2. தரை

3. மண்

4. வயல்

5. இடம்.