கூட்டு பட்டா பிரச்சனை

கூட்டு பட்டா பிரச்சனை ( கூட்டு பட்டா எப்படி இருக்கும்? )- நிலம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது பிரச்சனை தான். அது வருவாய்துறையினர்களால் கொடுக்கப்படும் பட்டாவாக இருந்தாலும் சரி அல்லது பதிவுத்துறையினர்களால் கொடுக்கப்படும் பத்திரமாக இருந்தாலும் சரி பிரச்சனை வருவது இயல்புதான்.

இதையும் காண்க: Tamilnilam

பட்டாவில் ஏற்படும் பிரச்சனைகள்

1. பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் இருத்தல்.

2. பட்டாவில் வாரிசுதாரர்களின் பெயர்கள் இல்லாமல் இருத்தல்.

3. தோராய பட்டாவில் அளவுகள் சரியாக இல்லாமல் இருத்தல்.

4. பத்திரம் மட்டுமே உள்ளது பட்டா இல்லை.

5. கூட்டு பட்டா பிரச்சனை.

கூட்டு பட்டா பிரச்சனை


இதில் ஐந்தாவதாக உள்ள கூட்டு பிரச்சனையை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். ஒரே நிலம் அல்லது பல நிலத்தின் உரிமையாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இருத்தல். இதனால் அந்த நிலங்களை விற்கும்போது அனைவரிடமும் ஒப்புதல் வாங்க வேண்டும். யாரோ ஒருவர் ஒப்புதல் இல்லாமல் இருந்தால் அந்த நிலங்களை விற்க முடியாது. மேலும் ஒருவர் மட்டுமே விலகிக்கொள்கிறார் என்றால் அவருக்கு நிலத்தினை உட்பிரிவு செய்து கொடுக்க வேண்டும் அல்லது அவருக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்து விடுதலை பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இருக்க வேண்டும். பட்டாவில் எப்படி எத்தனை பெயர் இருக்கின்றதோ அதேபோல் பத்திரத்திலும் அத்தனை பெயர் இருக்க வேண்டும்.

இதையும் படிக்க: Eservices.tn.gov.in patta chitta