பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை

பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை - பூர்வீகம் என்றாலே பாட்டன், முப்பாட்டன் சேர்த்து பாதுகாக்கப்படும் சொத்து பூர்வீக சொத்து எனலாம். அவர்கள் எந்த ஒரு செட்டில்மெண்ட் மற்றும் உயிலும் எழுதி வைக்காமல் போனால் அது பூர்வீக சொத்தாக மாறி விடும். பெண்களுக்கு பிரித்து கொடுக்கும் பாகப்பிரிவினை சொத்தை வரதட்சணை சொத்தில் சேர்க்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் ஒரு சட்டம் அறிவித்துள்ளது. பெண்கள் தான் சுயமாக சம்பாதித்த சொத்தை அதில் சேர்க்க கூடாது எனவும் அறிவித்துள்ளார்கள்.

பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை


அதனை எப்படி பிரிப்பது 

பொதுவாக சுயமாக சேர்த்து வைத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க முடியும். ஆனால் அதனை முறையாக பராமரிக்காமல் யாருக்கும் எழுதி வைக்காமல் போனால் பூர்வீகமாக மாறி விடும். அந்த சொத்து உங்களிடம் வந்து விட்டால் என்ன செய்வது என்றால் இந்து வாரிசுரிமை சட்டம் அடிப்படையில் முதல் நிலை வாரிசுகளுக்கு சென்று விடும்.

அந்த வாரிசுகள் மூன்று அல்லது நான்கு இருப்பின் பாக பிரிவினை செய்ய வேண்டும். அப்படி பாகப்பிரிவினை செய்யும் போது சரி சமமாக பிரிக்க வேண்டும். தனி தனியாக பாக பிரிவினை செய்யும் போது தனி பட்டாவாக மாற்றி கொள்ள வேண்டும். பாகம் வேண்டாமென்பவர்கள் விடுதலை பத்திரம் எழுதி கொடுக்க வேண்டும்.

பாகப்பிரிவினை செய்து கொடுக்கும் சொத்தை தான் பிறருக்கு தானமாகவோ அல்லது கிரையமாகவோ செய்ய முடியும். அந்த சொத்து தான் சுய சம்பாதித்த சொத்து கணக்கில் வரும்.

பூர்வீக சொத்து சட்டம்

Tn.Gov.in