பாகப்பிரிவினை செய்வது எப்படி

பாகப்பிரிவினை செய்வது எப்படி -  பாகப்பிரிவினை என்பது தனது அப்பாவோ அம்மாவோ தாத்தாவோ பாட்டியோ அனுபவித்து உள்ள பூர்வீக சொத்தினை சம பாகங்களாக பிரித்து கொள்வது ஆகும். அது ஏன் பெரும்பாலும் அம்மா, அப்பா, தாத்தா மற்றும் பாட்டி இவர்கள் கையில் தான் இருக்கமா என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். வீடு பெரியவர்கள் என்று பார்த்தால் முதலில் வருபவர்கள் இவர்கள் தான். ஒருவேளை இவர்களும் இல்லை என்றால் அண்ணன், தம்பி, அக்கா மற்றும் தங்கை இவர்களிடம் பூர்வீக சொத்துக்கள் இருக்கும். ஏனென்றால் பூர்வீக சொத்துக்கள் சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் லிஸ்டில் வருவதில்லை. அதனால் அதனை சம பாகமாக பிரித்தால் யாருக்குமே சொத்துக்கள் பிரச்சனை வரப்போவதில்லை.

மேலும் பெண்களுக்கும் முழு சொத்து உரிமை உள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் அப்பா தனது சுய சம்பாதத்தில் சேர்த்து வைத்த சொத்தை சம பாகங்களாக பிரித்து கொள்ள வேண்டும். உதாரணமாக 10 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அதனை இரண்டு பிள்ளைகளுக்கு தலா நான்கு நான்கு ஏக்கர் அவர்கள் பெயரில் எழுதி வைத்தாரே ஆனால் மீதம் இரண்டு ஏக்கர் நிலம் இன்னொரு மகன் அல்லது மகளுக்கு எழுதி வைத்தால் அப்போது பாகப்பிரிவினை பிரச்சனை வரும்.

அண்ணன் தம்பி பாகப்பிரிவினை

பாகப்பிரிவினை விடுதலை பத்திரம்

பாகப்பிரிவினை செய்வது எப்படி


அந்த இரண்டு ஏக்கர் நிலம் பெற்ற நபர் கோர்ட்டில் கேஸ் போடலாம். ஆனால் அது அவருடைய அப்பாவின் சுய சம்பாததில் சேர்த்த சொத்து என்பதால் வழக்கு நிலுவையில் இருக்கும். ஏனென்றால் அந்த சொத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்.

ஒருவேளை அந்த இரண்டு நபர்கள் அதற்கு ஏற்ற பணம் மூன்றாவது நபருக்கு கொடுத்தால் அதை வாங்கி கொள்வதும் வேண்டாமென்பதும் அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் பணத்தை வாங்கி கொண்டால் விடுதலை பத்திரம் எழுதினால் போதுமானது. மாறாக அவர் பணத்தை வாங்க வில்லை என்றால் அந்த நிலங்கள் ஏலத்திற்கு தான் செல்லும். 

நிலம் பாகப்பிரிவினை செய்ய Sub Division

சிட்டா என்றால் என்ன