குடும்ப அட்டை முகவரி மாற்றம் விண்ணப்பம்

குடும்ப அட்டை முகவரி மாற்றம் விண்ணப்பம் ( ஸ்மார்ட் கார்டு முகவரி மாற்றம் ) - ஒரு சிலர் தனது ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றி கொடுத்திருப்பார்கள் அல்லது சரியாக பூர்த்தி செய்திருக்க மாட்டார்கள். குடும்ப அட்டையில் முகவரி என்பது மிகவும் முக்கியமாகும். நாம் அதனை ஒரு அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான சான்றிதழ்காக பயன்படுத்தி கொள்ளலாம். நம்முடைய இணையத்தளத்தில் ஏற்கனவே சொன்னதைப்போல எந்த ஒரு பொது விநியோக சேவைகளுக்கும் Tnpds வெப்சைட் தான் செல்ல வேண்டும்.

குடும்ப அட்டை முகவரி மாற்றம் விண்ணப்பம்


1. Tnpds இணையத்தளத்தில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகளில் முகவரி மாற்றம் செய்ய என்கிற [பட்டனை தேர்வு செய்யவும்.


2. அப்படி தேர்வு செய்த உடன் பதிவு செய்யப்பட்ட பயனாளர் எண்ணை அதாவது உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை அதில் கொடுத்து லாகின் செய்யுங்கள்.


3. இந்த இரண்டு படிகளையும் பின்பற்றினால் உங்கள் புதிய முகவரிக்கான கட்டங்களில் உங்கள் சரியான கிராமம், கதவு எண், தெரு பெயர், மாவட்டம் மற்றும் தாலுகா இவைகளை எல்லாம் சரியாக கொடுக்கவும். Phh என்றால் என்ன

4. மொத்தமாக 15 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அதில் இணைக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே அந்த ஆவணங்களை ஸ்கேன் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: குடும்ப அட்டை உறுப்பினர் சேர்க்கை

குடும்ப அட்டை முகவரி மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்

1. ஆதார் கார்டு 

2. வாக்காளர் அட்டை 

3. எரிவாயு நுகர்வோர் அட்டை 

4. வீட்டு வரி ரசீது 

5. தொலைபேசி ரசீது 

6. பான் கார்டு 

7. அஞ்சல் துறை அடையாள அட்டை

8. வீடு ஆவணம் 

9. ஓட்டுநர் உரிமம் 

10. வங்கி புத்தகம் 

11. பாஸ்போர்ட் 

இதில் ஏதாவது ஒரு ஆவணங்களை Pdf formatil அதில் அப்லோட் செய்தால் இணைக்கப்பட்டது என்கிற டயலாக் box தோன்றும். பிறகு முகப்பு செல்ல பட்டனை தேர்வு செய்து உங்களுக்கு கொடுப்பட்டு இருக்கும் குறிப்பு எண்ணை அதில் கொடுத்தால் உங்கள் ஸ்மார்ட் கார்டு முகவரி எந்த நிலையில் உள்ளது என்று அதில் காட்டிவிடும்.

புதிய குடும்ப அட்டை எத்தனை நாட்களில் கிடைக்கும் 

புதிய ரேஷன் கார்டு வாங்குவது எப்படி 

ரேஷன் கார்டில் குழந்தை பெயர் சேர்க்க