புதிய ரேஷன் கார்டு வாங்குவது எப்படி

புதிய ரேஷன் கார்டு வாங்குவது எப்படி - புதிதாக ரேஷன் கார்டு வாங்க நாம் எங்கும் அலைய தேவையில்லை. நீங்களே உங்கள் தொலைபேசியில் புதிய ரேஷன் கார்டு வாங்கலாம். அதனை வாங்குவதற்கு முன்னர் ஏற்கனவே உங்கள் பெயர் வேறு ஒரு ஸ்மார்ட் கார்டில் இருந்தால் நீக்கம் செய்துவிட்டு பிறகு புதியதாக அப்ளை செய்யவும். ஏனென்றால் ஒரு சிலர் புதியதாக திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் புதிய ரேஷன் கார்டு கட்டாயம் வாங்க வேண்டும். அவ்வாறு அப்ளை செய்யும் முன்னர் அங்கு டெலீட் செய்து விட்டு பிறகு நியூ ரேஷன் கார்டு ஓபன் செய்து கொள்ளுங்கள்.

புதிய ரேஷன் கார்டு வாங்குவது எப்படி


முன்பு எல்லாம் ஆன்லைனில் அப்ளை செய்யும் வசதி இல்லை. அது மட்டுமில்லாமல் ரேஷன் அட்டையில் அனைத்து மாதங்களுக்கும் வாங்கிய பொருட்கள் எல்லாம் அதில் குறிப்பிட்டு தருவார்கள் . ஆனால் இப்பொது வாங்கப்படும் பொருட்கள் எல்லாம் உங்கள் தொலைபேசிக்கு செய்தியாக வரும். இங்கே நாங்கள் கொடுக்கும் படிகளை பின்பற்றி உங்கள் புதிய அட்டையை பெற்று கொள்ளுங்கள்.

1. அனைத்து விதமான விவரங்களுக்கும் நாம் Tnpds வெப்சைட் தான் செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள். 


2. புதிய மின்ணணு அட்டை மற்றும் பழைய குடும்ப அட்டை பதிவு என்று இரண்டும் இருக்கும். இதில் முதலில் வருவதை சூஸ் செய்து விடுங்கள்.


3. மூன்றாவதாக உங்கள் அடிப்படை விவரங்களை தொடர்ந்து அப்டேட் செய்து வாருங்கள். உதாரணமாக உங்கள் பெயர், குடும்ப உறுப்பினர்கள், முகவரி மற்றும் இதர ஆவணங்கள் எல்லாம் அதில் அப்டேட் செய்யுங்கள். 


4. தமிழில் type செய்ய ஒவ்வொரு கட்டத்தின் பக்கத்தில் உள்ள பென்சில் மார்க்கை தேர்வு செய்தால் தமிழில் உங்கள் விவரங்களை அதில் என்டர் செய்ய முடியும். அப்படி பென்சில் மார்க் இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்படி ஆங்கிலத்தில் type செய்கிறீர்களோ அப்படியே அந்த கட்டத்தில் பூர்த்தி செய்தால் சிறிய நேரம் லோடிங் ஆகி அதில் என்டர் ஆகும்.

5. உங்கள் விண்ணப்பம் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட சில நாட்களில் ஒரிஜினல் வெப்சைட் திரும்பவும் சென்று லாகின் செய்து பதிவிறக்கி கொள்ளுங்கள். 


6. இந்த நகலை எடுத்து கொண்டு உங்களுக்குண்டான பொருட்களை வாங்க முடியும். ஏனென்றால் ஸ்மார்ட் கார்டு வருவதற்கு தாமதம் ஏற்பட்டால் இத்தகைய நகல் உபயோகமாகிறது.

ரேஷன் கார்டில் குழந்தை பெயர் சேர்க்க

ரேஷன் கார்டு பெயர் நீக்கம் செய்வது எப்படி