-->
ரேஷன் கார்டில் குழந்தை பெயர் சேர்க்க

ரேஷன் கார்டில் குழந்தை பெயர் சேர்க்க

ரேஷன் கார்டில் குழந்தை பெயர் சேர்க்க - ரேஷன் கார்டில் குழந்தை பெயர் சேர்ப்பது என்பது மிகவும் சுலபமான விஷயம் தான். அதனை நீங்கள் வீட்டில் இருந்தும் அல்லது தனியார் மையங்களிலும் எளிதாக பெயர் சேர்க்கலாம். பொதுவாக ரேஷன் கார்டில் வீட்டு குடும்பத்தார் பெயர் மட்டும் தான் இருக்கும். அதற்கு பிறகு பிறந்த குழந்தை பெயர் சேர்த்து ஆக வேண்டும். எந்த ஒரு பெயரும் நீக்க சேர்க்க திருத்த Tnpds இணையதளம் தான் செல்ல வேண்டும்.

ரேஷன் கார்டில் குழந்தை பெயர் சேர்க்க


1. Tnpds இணையதளத்தில் மின்ணணு அட்டை தொடர்பான சேவைகளில் உறுப்பினரை சேர்க்க என்பதை தேர்வு செய்து உங்கள் 10 இலக்க ஏற்கனவே பதிவு செய்த தொலைபேசி எண்ணை கொடுக்கவும்.

Tnpds


2. கொடுத்த பின்னர் உங்கள் எண்ணிற்கு OTP ஒன்று வரும். அதனை 300 வினாடிக்குள் கொடுக்கப்படும் கட்டத்தில் என்டர் செய்யவும்.

3. அதில் உங்கள் மொத்த விவரங்கள் இருக்கும். உதாரணமாக பெயர், குடும்ப அட்டை எண், நியாய விலை குறியீடு போன்றவைகள் இருக்கும்.

4. உங்கள் குடும்பத்தின் தலைவர்  உறுப்பினர்கள் அனைவரின் விவரங்கள் அடங்கி இருக்கும்.எல்லா படிகளையும் முடித்த பின்னர் 

5. கடைசியாக குடும்ப உறுப்பினர் சேர்க்க அவரின் விவரங்களை கேட்கும். பிறகு ஆதார் அல்லது பிறப்பு சான்றிதழ் இதில் ஏதாவது ஒன்றை இணைக்கப்பட வேண்டும்.

6. எல்லா படிகளையும் முடித்த பின்னர் குறிப்பு எண் ஒன்று வழங்கப்படும். இந்த குறிப்பு எண் எல்லாவற்றுக்கும் பயன்படும். அந்த குறிப்பு எண்ணை ஒரு 15 நாளில் இருந்து 30 நாட்களுக்கள் Tnpds முகப்பு பேஜ்க்கு சென்று பார்த்தால் அட்டை நிலவரம் தெரிந்து விடும். அப்படி முழுவதுமாக விண்ணப்பம் உள்ள நிலையில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

ரேஷன் கார்டு பெயர் நீக்கம் செய்வது எப்படி

நியூ ரேஷன் கார்டு அப்ளை ஆன்லைன் தமிழ்நாடு