குடும்ப அட்டை உறுப்பினர் சேர்க்கை 2023

குடும்ப அட்டை உறுப்பினர் சேர்க்கை ( ration card or kudumba attai name add online ) - தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் கொடுப்பது நியாய விலை கடை எனும் ரேஷன் கடை தான். இந்த ரேஷன் கடையில் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி நாம் பொருட்களை மிகவும் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம்.

குடும்ப அட்டை உறுப்பினர் சேர்க்கை


உறுப்பினர் எவ்வளவு பேர் ஒரு அட்டையில் இருக்கிறார்களோ அதற்கு ஏற்றாற்போல் தான் பொருட்களும் ரேஷன் கடைகளில் கொடுப்பார்கள். குடும்ப தலைவராக ஒருவர் நியமனம் செய்யப்படுவார். ஆனால் ரேஷன் அட்டையில் உள்ள அனைவரும் பொருட்களை வாங்கி பயன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் மாதம் விண்ணப்பம்

குடும்ப அட்டையில் உறுப்பினர் சேர்ப்பது எப்படி

1. நாம் முதலில் tnpds.gov.in இணையத்தளத்தில் செல்ல வேண்டும்.

2. இதில் வலது பக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.

3. மூன்றாவதாக சேர்ப்பவரின் முழு விவரம், ஆதார் அல்லது பிறப்பு சான்றிதழ் அப்லோட் செய்ய வேண்டும். எல்லாம் சரி என்று வந்தவுடன் உங்களுக்கு ஒரு குறிப்பு எண் ஒன்று வழங்கப்படும். அந்த குறிப்பு எண்ணை கொண்டு உங்கள் விண்ணப்பத்தின் நிலையினை அறிய முடியும்.

இதையும் காண்க: ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்