புதிய குடும்ப அட்டை எத்தனை நாட்களில் கிடைக்கும்

புதிய குடும்ப அட்டை எத்தனை நாட்களில் கிடைக்கும் - புதியதாக ஒரு ஸ்மார்ட் கார்டு உங்கள் வீட்டுக்கு வர 30 நாட்கள் ஆகும். அதாவது 30 நாட்களுக்குள் குடும்ப அட்டை வந்து விடும். ஒரு சில நேரங்களில் 10 அல்லது 15 நாட்களே ஆகும். மறு சில நேரத்தில் 15 லிருந்து 30 நாட்கள் ஆகும் குடும்ப அட்டையை பெற. இந்த குடும்ப அட்டைகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு எளிதில் பயன் தருகிறது. அதனால் தமிழக அரசாங்கம் ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வந்தது. இந்த நேரத்தில் அதிகப்படியான மக்கள் புதிதாக ரேஷன் அட்டையை அப்ளை செய்து வருகின்றார்கள். இதனால் மேற்சொன்ன நாட்களின் எண்ணிக்கை மாறலாம். அதாவது 15 லிருந்து 30 நாட்கள் ஆகும் என்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 30 லிருந்து 45 நாட்கள் கூட ஆகலாம்.

புதிய குடும்ப அட்டை எத்தனை நாட்களில் கிடைக்கும்


அப்டேட் மார்ச் 25, 2022

புதிய கார்டு இப்போது வெறும் 15 நாட்களுக்குள் வாங்கி விடலாம் என்றும் பொருட்களை வாங்க முடியாத மக்களுக்கு பிராக்ஸி முறை மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அதற்கான சான்றிதழை மாவட்ட வழங்கல் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம். அரசாங்க விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் மட்டுமே அலுவலகங்கள் செயல்படும்.

குடும்ப அட்டை எண் விவரம்

குடும்ப அட்டை சேவைகள்

1. சர்க்கரை 

2. கோதுமை 

3. எண்ணெய் 

4. அரிசி, பருப்பு வகைகள்

5. பரிசு பொருட்கள் 

6. உதவித்தொகைகள் 

7. மற்றும் இதர 

இத்தனை சேவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் மற்றும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மக்களும் உபயோகப்படுத்தலாம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 35 கிலோ அரிசியும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மக்களுக்கு 15 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.

நீங்கள் ஏற்கனவே அப்ளை செய்து விட்டு ஸ்மார்ட் கார்டு வரவில்லை என்றால் Tnpds வெப்சைட் சென்று செக் செய்யுங்கள். அப்படி செக் செய்யும் பட்சத்தில் உங்கள் ஸ்மார்ட் கார்டு நிலை என்ன என்று நாம் பார்க்க இயலும்.

முதலில் நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்து உள்ளே சென்றால் ஸ்மார்ட் கார்டு செயலாக்கம் என்கிற option யை தேர்வு செய்தால் ஸ்மார்ட் கார்டு பிரிண்டிங் செய்யப்பட்டதா அல்லது பிரிண்டிங் செய்யப்படலையா என்று அந்த screen லேயே காட்டிவிடும். ஒருவேளை பிரிண்டிங் செய்யப்பட்டது என்றால் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு கார்டு எங்கு இருக்கிறது மற்றும் எங்கு சென்று வாங்க வேண்டும் என்பதை ஒரு செய்தியில் அனுப்புவார்கள்.

புதிய ரேஷன் கார்டு வாங்குவது எப்படி

ரேஷன் கார்டில் குழந்தை பெயர் சேர்க்க

ரேஷன் கார்டு பெயர் நீக்கம் செய்வது எப்படி