குடும்ப அட்டை எண் விவரம்

குடும்ப அட்டை எண் விவரம் ( குடும்ப அட்டை விவரம் அறிய ) - குடும்ப அட்டை என்பது ஒரு வகையில் அன்றாட வாழ்வில் கஷ்டப்படுபவர்களுக்கும் அவ்வப்போது குடும்ப செலவு பொருட்களை வாங்க கஷ்டப்படுபவர்களுக்கும் ஸ்மார்ட் அட்டை உபயோகமாகிறது. இதனால் தான் நமது அரசாங்கம் நியாய விலை கடைகளில் வாங்கும் பொருட்கள் மளிகை கடையை விட குறைவாக இருக்கிறது.

ரேஷன் கார்டு தொலைந்து விட்டது எப்படி வாங்குவது

குடும்ப அட்டை எண் விவரம்


ஒரே குடும்பத்தில் தனி தனியாக இருந்தாலும் அவர்களுக்கு அட்டை வழங்கப்படுகிறது. குறைந்த பட்சமாக 2 லிருந்து அதிகபட்சமாக எத்தனை பேர் வேண்டுமானாலும் நாம் அதில் இணைத்து கொள்ளலாம். அதிகமாக இணைக்கப்படும் அத்தனை நபர்களுக்கும் இலவச அரிசி 20 கிலோ முதல் 35 கிலோ வரையும் வழங்கப்படுகிறது.

ஒருவேளை ஒரே குடும்பத்தில் இருக்கும் நபர்கள் திருமணம் செய்து இருந்தால் அதிலே இருக்க கூடாது. தனியாக ஸ்மார்ட் கார்டு விண்ணப்பித்து இருக்க வேண்டும். அந்த ஸ்மார்ட் கார்டு வர தாமதம் ஏற்பட்டால் Tnpds நகலை எடுத்து உங்களுக்குண்டான பொருட்களையும் மற்றும் அவ்வப்போது தமிழக அரசு கொடுக்கும் இலவச மணியங்களையும் பெற முடியும்.

குடும்ப அட்டை விவரங்கள் 

1. PHH - அனைத்து பொருட்களையும் வாங்கலாம் குறைந்த விலையில் 

2. PHH - AAY - 35 கிலோ அரசி மற்றும் அனைத்து பொருட்களும் வாங்கலாம் 

3. NPHH - அனைத்து பொருட்கள் வாங்க முடியும் 

4. NPHH - S - அரிசி தவிர மற்ற பொருட்கள் வாங்கலாம் 

5. NPHH - CH - எந்த பொருட்களையும் வாங்க முடியாது. வேண்டுமென்றால் இதனை ஒரு முகவரி Proof க்கோ அல்லது வேறு ஒரு ஆதாரமாக காட்டலாம்.

குறிப்பு 

இதில் மேலே குறிப்பிட்டு இருக்கும் குடும்ப அட்டை எண் விவரங்கள் அனைத்தும் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வேறுபடும். அவைகள் வருமானம், நடுத்தர மக்கள், முதல்நிலை மக்கள், வருமானம் இழந்தவர்கள், இரண்டு பேர் மட்டும் ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பொறுத்து இந்த அட்டை எண் மாறுபடும்.

ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி

குழந்தை பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி