-->
கடன் உறுதி சீட்டு

கடன் உறுதி சீட்டு

கடன் உறுதி சீட்டு - கடன் உறுதி சீட்டு என்பது ஒருவரிடம் பணம் கொடுத்ததற்காக அத்தாட்சியாக பிராமிசரி நோட்டில் கையெழுத்து வாங்கும் சீட்டு ஆகும். பணம் பெறுபவர் ஏமாற்றாமல் தடுக்க இத்தகைய கடன் உறுதி சீட்டு யூஸ் ஆகிறது. மேலும் பணம் கொடுக்கும் நபருக்கு ஒரு உறுதுணையாக இந்த சீட்டு உபயோகமாகிறது.

கடன் உறுதி சீட்டு


கேள்வி 1 - கடன் உறுதி சீட்டில் எவ்வளவு அமௌன்ட் வரை செல்லும் ?

ரூபாய் 5000 முதல் இந்த கடன் சீட்டு செல்லும். ரூபாய் 5000 கும் குறைவான அமௌன்ட் இந்த சீட்டில் போட்ருந்தால் செல்லாது.

கேள்வி 2 - சாட்சிகள் முக்கியமா இந்த கடன் சீட்டுக்கு ? 

கண்டிப்பாக அவசியம் இல்லை. ஒருவேளை இருந்தால் பின்னாளில் வழக்கு தொடுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

கேள்வி 3 - எப்படி இந்த கடன் சீட்டு எழுதுவது ?

நாம் எழுத தேவையில்லை. நீங்கள் கடைகளில் சென்று கேட்டாலே இத்தகைய பிராமிசரி நோட் கிடைக்கும். அதில் பணம், வட்டி, தேதி மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி பூர்த்தி செய்த பின்னர் கடைசியில் கையெழுத்து வாங்க வேண்டும். ரெவின்யூ ஸ்டாம்ப் மேல் தான் கையெழுத்து வாங்க வேண்டும். அப்படி ரெவின்யூ ஸ்டாம்ப் மேல் கையெழுத்து போடாமல் இருந்தால் கண்டிப்பாக அந்த கடன் சீட்டு செல்லாது.

கேள்வி 4 - பணம் தரவில்லை என்றால் யாரை நாடுவது ?

கடன் கொடுத்தவர்கள் உரிமையியல் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடுக்கலாம். அதற்கு முன்னர் ஆவணங்கள் சரியாக இருந்தால்  செல்வது மிகவும் நல்லது.

கேள்வி 5 - கடன் சீட்டில் அடித்தல் திருத்தல் செய்து விட்டேன் என்ன செய்வது ?

கடன் பெறுபவர் பணம் கொடுத்துவிட்டால் பிரச்சனை இல்லை. அப்படி கடன் கொடுக்காத பட்சத்தில் நீங்கள் வழக்கு தொடுக்கும் நேரத்தில் இந்த கடன் சீட்டு கண்டிப்பாக செல்லாது. கண்டிப்பாக அடித்தல் திருத்தல் எதுமே இருக்க கூடாது. அப்படி அடித்தல் திருத்தல் இருப்பின் மறுபடியும் கடன் சீட்டு எழுதுங்கள். 

தனி அதிகார பத்திரம்

பூர்வீக சொத்தை பிரிக்கும் முறை

Tn.Gov.In