ரெவின்யூ ஸ்டாம்ப்

ரெவின்யூ ஸ்டாம்ப் - ரெவின்யூ ஸ்டாம்ப் என்பது கடன் உறுதி பத்திரத்திற்கும் கடன் ரசீதுக்கும் உபயோகமாயுள்ளது. இதனால் கடன் பத்திரத்தில் கடைசியில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டப்படும். அவ்வாறு ஒட்டிய ஸ்டாம்பில் கையெழுத்து இட்டால் தான் அந்த கடன் உறுதி பத்திரம் செல்லுபடியாகும். 

ரெவின்யூ ஸ்டாம்ப்


எதற்கு இந்த ஸ்டாம்ப் 

கடன் கொடுப்பவர் ஒரு பிராமிசரி நோட்டில் கடனாளி பெயர் முகவரி பணம் வட்டி வீதம் இதனை எழுதி கடைசியில் ஸ்டாம்பில் கையெழுத்து வாங்குவர். இதனால் பணம் வாங்குபவர் இல்லையென்று மறுக்கமுடியாது என்ற காரணத்தினால் இத்தகைய பிராமிசரி நோட்டில் ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்து வாங்குகின்றனர். ஸ்டாம்பில் தான் கையொப்பம் இட வேண்டும். ஒருவேளை கையெழுத்து ஸ்டாம்ப் இல்லாத பகுதியில் போட்டால் அந்த பிராமிசரி நோட் செல்லாது.

இந்த பிராமிசரி நோட்டில் வட்டி வீதம் வருடத்திற்கு 24 சதவீதம் மட்டுமே வாங்க முடியும். அதற்கு மேல் வசூலிக்கக்கூடாது. முன்பு எல்லாம் 25 பைசா ஸ்டாம்ப் தான் கடன் பத்திரத்தில் ஒட்டுவார்கள். ஆனால் இப்போது 1 ரூபாய் ஸ்டாம்ப் தான் கடன் பத்திரத்தில் ஒட்டுவார்கள். 

ஒருவேளை கடன் வாங்குபவர் மீறும் பட்சத்தில் அவர் மீது உரிமையியல் வழக்கு போடலாம். அவர் என்றைக்கு கையெழுத்து இடுகிறார்களோ அன்றைய தேதியிலிருந்து மூன்று வருடங்களுக்குள் கடன் கொடுத்தவர் வழக்கு தொடலாம். 

கடன் வாங்கியவர் மாத மாத வட்டி பணம் அல்லது முதல் பணம் கொடுக்கும் பட்சத்தில் அந்த கிரீன் பேப்பர் பின்பிறம் கொடுத்த தேதி பணம் மற்றும் வட்டியை எழுதி கையெழுத்து இடுதல் மிகவும் நல்லது. கடன் வாங்கியவர் கையொப்பம் இடுவதற்கு முன்னர் அந்த கிரீன் பேப்பரில் அனைத்து தவகல்களையும் நிரப்பி இருக்க வேண்டும். அவ்வாறு காலியாக உள்ள பேப்பரில் பண அவசரத்துக்காக கையெழுத்து இட்டால் உங்களுக்கே பிரச்சனை வந்து விடும்.

பணம் தொகை எல்லாம் கொடுத்த பிறகு நீங்கள் கையொப்பம் இட்ட அந்த பேப்பரை வாங்கி விடுவது நல்லது. 

அடமான பத்திரம் மாதிரி Pdf

பண கடன் பத்திரம்

Fb பேஜ்