பிராமிசரி நோட்டு மாதிரி PDF

பிராமிசரி நோட்டு மாதிரி PDF ( Promissory note in tamil ) - பிராமிசரி நோட்டு என்பது ஒரு வகையான கடன் பத்திரம் ஆகும். அதை நம் ஊரில் பாண்டு என்பர். இதன் மதிப்பு 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் அதில் ஒரு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒன்று கொடுப்பார்கள்.  அதில் மேலே பணம் எவ்வளவு, பெயர், தகப்பனார் பெயர், வட்டம், மாவட்டம், கிராமம், நாள், எவ்வளவு காலம் மற்றும் எதற்காக வாங்குகிறார் என்பது இருக்கும். 

பிராமிசரி நோட்டு மாதிரி PDF


பிராமிசரி நோட்டு எழுதும் முறை

கடன் கொடுப்பவர் முதலில் அந்த பாண்ட் உங்கள் கைப்படவே எழுதலாம். மேலும் கடன் வாங்குபவரிடம் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் யை சொல்லி விடுங்கள். அந்த புரோ நோட்டில் எந்த தேதியில் வாங்கினார் எந்த தேதியில் கொடுக்கப்போகிறார் மற்றும் எவ்வளவு வட்டி என்பதை எல்லாம் அந்த பேப்பரில் மென்ஷன் செய்து இருக்க வேண்டும்.

இதையும் படிக்க: Udr க்கு முந்தைய ஆவணங்கள்

பிறகு ரெவின்யூ ஸ்டாம்ப் இல் கையெழுத்து இட சொல்லுங்கள். சாட்சிகள் முக்கியமில்லை இந்த பிராமிசரி நோட்டுக்கு. இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு சாட்சிகளை கையெழுத்து இட சொல்லுங்கள்.

கடன் வாங்கிவர் உங்களுக்கு பணம் தரவில்லையென்றால் அந்த பிராமிசரி நோட்டை வைத்து கேஸ் போடலாம். காவல்நிலையத்திற்கு நீங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உரிமையியல் நீதிமன்றத்துக்கு சென்று கேஸ் போடுங்கள். கண்டிப்பாக உங்கள் கேஸ் எடுத்து கொள்வார்கள். முக்கியமாக நீங்கள் கடன் கொடுத்த தேதியில் இருந்து மூன்று வருடங்களுக்குள் தான் அந்த பிராமிசரி நோட் செல்லும்.

இதையும் காண்க: Veetu vari Online payment

ஒருவேளை கடன் பணம் கொடுத்து விட்டார் என்றால் அந்த பாண்ட் யை திருப்பி கொடுத்து விடுங்கள் கடன் வாங்கிவர்களும் அதனை கண்டிப்பாக கேட்டு வாங்கி கொள்ளுங்கள். 

கடன் பத்திரம் மாதிரி

பண கடன் ஒப்பந்தம் வடிவம்