தனி அதிகார பத்திரம்

தனி அதிகார பத்திரம் - தனி அதிகார பத்திரம் என்பது ஸ்பெஷல் பத்திரம் ஆகும். ஒரு தனிப்பட்ட உரிமைக்காக மட்டும் இத்தகைய தனி அதிகார பத்திரம் உபயோகமாகிறது. நிலத்தின் உரிமையாளர் ஏதோ ஒரு அதிகாரத்தை மட்டுமே தன்னுடைய முகவருக்கு கொடுப்பார் உதாரணமாக விற்பனை, குத்தகை அல்லது வரி கட்டுவது. இதில் ஏதாவது ஒரு அதிகாரத்தினை மட்டுமே முதல்வர் கொடுப்பார்.

தனி அதிகார பத்திரம்


எடுத்துக்காட்டு 1

நிலம் சொந்தக்காரர் அதாவது முதல்வர் தன்னால் அந்த நிலத்தை விற்பனை செய்ய ஒரு நபரை நியமிக்கிறார் என்று வைத்து கொள்வோம். அவர் முகவர் அல்லது பவர் ஏஜென்ட் என்று அழைக்கப்படுவார். இப்பொது அந்த நிலத்தை நிலம் சொந்தக்காரர் முகவரிடம் விற்க சொன்னால் அவர் விற்க முயல்வார். நிலம் வாங்குபவர் பவர் பத்திரத்தை படித்து நிலம் உரிமையாளரிடம் ஒப்புதல் பெற்று பிறகு தான் கிரயத்திற்கு யோசிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு 2

பவர் ஏஜென்ட் அனைத்து விவரங்களையும் மற்றும் உரிய ஆவணங்களையும் காண்பித்து விற்பனை செய்தாலும் நிலம் வாங்குபவர்கள் நிலத்தின் உரிமையாளர் ஒப்புதல் கடிதம் மற்றும் லைப் சான்றிதழை வாங்கிய பின்னர் தான் கிரையம் செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டு 3

பவர் ஏஜெண்டாக இல்லாமல் பத்திரம் என்னிடம் உள்ளது. அவர் என்னை பார்த்துக்க சொன்னார் என்று உங்களிடம் கிரையமோ அல்லது குத்தகைகைக்கு செய்தார் என்றால் உங்களுக்கு தான் பிரச்சனை. நிலம் உரிமையாளர் வயதான காரணத்தாலும் வர முடியாத நிலையில் இருந்தால் நிலம் வாங்குபவர் நேரடியாக சென்று ஆலோசித்து பின்னர் இடம் வாங்குங்கள்.

பெண்கள் சொத்துரிமை சட்டம் 2005 Pdf

தனியார் நில ஆக்கிரமிப்பு சட்டம்

ஜெனரல் பவர் பத்திரம்

Tn.Gov.In