-->
வாடகை ஒப்பந்த பத்திரம் rental agreement in Tamil

வாடகை ஒப்பந்த பத்திரம் rental agreement in Tamil

வாடகை ஒப்பந்த பத்திரம் rental agreement in Tamil - வாடகை ஒப்பந்தம் என்பது வீட்டின் உரிமையாளரும் வீடு குடி இருப்போரும் ஒப்பந்தம் ஒன்றை போட்டுக்கொள்வது ஆகும். அதை வடிவமைப்பது வீட்டின் உரிமையாளர் தான். அதை முழுவதும் படித்துவிட்டு கை ஒப்பம் ஒன்றை இடுவார்கள்.

வாடகை ஒப்பந்த பத்திரம் rental agreement in Tamil


வாடகை ஒப்பந்தம் பெரிய பெரிய மாநகராட்சிகளில் தான் நடைமுறை செயல்படுத்துகின்றனர். ஏனென்றால் கிராம புறங்களை காட்டிலும் நகர் புறங்களில் எண்ணிக்கையும் வாடகை விடும் நபர்களும் அதிகம். எந்த வித பிரச்சனைகளும் வராமல் இருக்க இத்தகைய ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஒப்பந்த பத்திரத்தில் என்னென்ன இருக்கும் என்பதை கீழே பார்ப்போம்.

1. வீட்டின் உரிமையாளர் பெயர் முகவரி தொலைபேசி எண்

2. வீட்டின் இடத்தின் அளவு

3. மின்சார கட்டணம் 

4. வீடு அட்வான்ஸ் 

5. வீடு வாடகை 

6. வாடகைதாரரின் பெயர் முகவரி தொலைபேசி எண் 

7. எத்தனை மாதம் குடிருக்கப்போகிறார்கள் 

8. இரண்டு சாட்சிகள் 

9. 11 மாத அக்ரீமெண்ட் 

10. எத்தனை பேர் குடியிருக்கப்போகிறார்கள்

மேலே உள்ள அத்தனை தகவல்களும் அதில் எழுதி இருக்கும். அதை  தவிர்த்து மின்சார கட்டணம் வாடகையிலே சேர்ப்பதா அல்லது தனியாக அவர்களாகவே செலுத்துகிறாரா என்று அதில் சொல்லி இருக்க வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்களாக வாடகை கட்ட வில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனைகள் மற்றும் தேவை இல்லாத செயல்கள் ஏதாவது செய்தால் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதையும் அதில் கூறி இருக்க வேண்டும்.

இதை எல்லாம் ஒரு 20 ரூபாய் முத்திரைத்தாள் கொண்ட பத்திரத்தில் type அடித்தாலும் பரவாயில்லை அல்லது கையில் எழுதினாலும் பரவாயில்லை அதில் அனைத்தையும் சொல்லி இருக்க வேண்டும். 11 மாதம் அக்ரீமெண்ட் போட்டால் அதனை வீட்டின் உரிமையாளர் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வருட கணக்கில் அக்ரீமெண்ட் போட்டால் நிச்சயம் அதனை பதிவு செய்ய வேண்டும்.

வீட்டு வாடகை சட்டம் 2021

வீட்டில் வாடகை ஒப்பந்த வடிவம்

Fb பேஜ்