தஞ்சை பெரிய கோவில் பற்றி 10 வரிகள் ( thanjai periya kovil history in tamil ) - இந்தியாவில் மிகவும் சிறப்பு மிக வாய்ந்த கோவில்களில் தனிசிறப்பினை இந்த தஞ்சை பெரிய கோயில் பெற்றுள்ளது. இதற்கு பெருவுடையார் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில் என்றும் சிறப்பு பெயர்கள் உண்டு. 1003 ஆம் ஆண்டில் இந்த கோவில் கட்டிட வேலைகள் தொடங்கியது. தொடர்ந்து 7 ஆண்டுகள் வரையும் இந்த பணிகள் இருந்து இறுதியில் 1010 ஆம் ஆம் ஆண்டில் இந்த கோவில் முழுமையாக வடிவமைக்கப்பட்டது.
இந்த கோவிலினை ராஜ ராஜ சோழன் அவர்கள் தான் கட்டினார். இந்த கோவில்களுக்காக வேலை செய்த மக்கள் அனைவரின் பெயரும் கல்வெட்டுகளில் காணமுடியும். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில் வருடத்தில் மகா சிவராத்திரி மற்றும் சித்திரை திருநாளன்று இங்கு விசேஷமாக இருக்கும். மக்கள் இந்த வேளையில் வந்து அருள்மிகு சிவபெருமானை வணங்கி அருள் பெறலாம்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: திருமழபாடி நந்தி கல்யாணம் 2023
சிறப்பு அம்சங்கள்
பெருவுடையார் கோவிலின் உயரமானது மொத்தமாக 216 அடியை கொண்டுள்ளது. இதன் மேற்கூரை அதாவது விமானம் மட்டும் 80 டன் எடையை கொண்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் தான் உலகிலேயே பெரிய லிங்கம் என்று வரலாறு கூறுகிறது.
இதையும் படியுங்க: காளஹஸ்தி செல்லும் வழி
செல்லும் வழி
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெறும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் பாலகணபதி நகர் வழியாக வரலாம். கள்ளக்குறிச்சியில் இருந்து 03 மணி நேரமும் சென்னையில் இருந்து 07 மணி நேரமும் காரைக்கால் இருந்தும் 03 மணி நேரமும் ஆகின்றன.
இதையும் படியுங்க: முத்துமலை முருகன் கோவில் செல்லும் வழி