காளஹஸ்தி செல்லும் வழி

காளஹஸ்தி செல்லும் வழி - ஸ்ரீ காளத்திநாதர் அவர்கள் இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள் புரிகின்றார். ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வருவது வழக்கம். அது மட்டுமல்லாமல் வாழ்வில் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் சரி அல்லது திருமணத் தடைகள் மற்றும் இதர பிரச்சனைகள் இருந்தாலும் இங்கு வந்தால் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை. இங்கு பாதாள விநாயகர் இருப்பது கூடுதல் பலம்.

காளஹஸ்தி செல்லும் வழி


திருப்பதி கோவில் செல்லும் வழியில் இந்த கோவில் அமைவிடம் இருப்பதால் திருப்பதியை தரிசனம் செய்து விட்டு இங்கு மக்கள் வருவார்கள். பொதுவாகவே மக்களுக்கு இதில் ஒரு சந்தேகங்கள் எழும். அது என்னவென்றால் திருப்பதி சென்று விட்டு காளஹஸ்தி செல்வதா அல்லது காளஹஸ்தி சென்று விட்டு திருப்பதிக்கு செல்வதா என்று சந்தேகங்கள் வரக்கூடும். காளஹஸ்தி பரிகார ஸ்தலம் என்பதால் முதலில் காளஹஸ்தி சென்று பிறகு புண்ணிய ஸ்தலமான ஏழுமலையானை தரிசிக்கலாம்.

சற்று முன்: முத்துமலை முருகன் கோவில் செல்லும் வழி

காளஹஸ்தி எங்கு உள்ளது மற்றும் காளஹஸ்தி கோவில் திறக்கும் நேரம்

இந்த கோவில் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பதி இரயில் நிலையத்தில் இருந்து 35 - 40 கிலோ மீட்டர் தொலைவில் காள அஸ்தி கோவில் உள்ளது. இந்த இரயில் நிலையத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல 45 நிமிடங்கள் ஆகும். அதேபோல் திருப்பதி பஸ் நிலையம் சென்றும் இங்கு வரலாம். இங்கு பயண நேரம் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் பஸ் கட்டணமாக ரூபாய் 45 முதல் 50 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இங்கு காலை 05 டு இரவு 09 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

சற்று முன்: ராகு கேது பெயர்ச்சி 2023 எப்போது