திருமழபாடி நந்தி கல்யாணம் 2023 ( thirumalapadi nandi kalyanam 2023 date and time ) - நாம் எந்த சிவன் கோவில்களுக்கும் சென்றாலும் அங்கு நந்தி பெருமான் அவர்கள் இருப்பார்கள். அந்த வகையில் திருமணத்தடைகள் இருப்பவர்கள் இக்கோவிலில் உள்ள நந்தி அவர்களை வழிபடலாம். அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டத்தில் ( தாலுகா ) திருமழபாடியில் அருள்மிகு சுந்திராம்பிகை உடனாய அருள்மிகு வைத்திநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடா வருடம் நந்திபெருமானுக்கு கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.
ஒவ்வொரு வருடத்தில் உள்ள பங்குனி மாதத்தில் வரக்கூடிய புனர்பூசம் நட்சத்திரம் அன்று நந்தி கல்யாணம் வைபோகம் நடைபெறும். இதனை காண மக்கள் வெள்ளம் போல திரள்வார்கள். இந்த தலத்தில் உள்ள பெருமையே கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் நடைபெறும் என்பதே. திருமணத்தடை இருக்கக்கூடிய மக்கள் எவரேனும் இங்கு வந்தால் அடுத்த ஆண்டு இங்கு நடைபெறுகின்ற நந்தி திருமணத்திற்கு முன்பே நடந்துவிடும் என்பது ஐதீகம். மேலும் இங்கு தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அங்குள்ள தீர்த்த நீரினால் வைத்தியநாதரை அபிஷேகம் செய்தால் நல்லது. இங்குள்ள வைத்தியநாத சுவாமி அவர்கள் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
இதையும் படிக்கலாமே: காளஹஸ்தி செல்லும் வழி
திருமழபாடி செல்லும் வழி
இந்த கோவில் தஞ்சாவூரில் இருந்து 28 கிலோ மீட்டரும், திருவையாறில் இருந்து 16 கிலோ மீட்டரும் புள்ளம்பாடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு நந்தி கல்யாணம், மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் மற்றும் திருக்கார்த்திகை போன்ற நாட்களில் விசேஷங்கள் அதிமாக இருக்கக்கூடும்.
திருமழபாடி நந்தி கல்யாண நாள் 2023
இந்த ஆண்டு மார்ச் மாதம் அதாவது பங்குனி 16 வியாழக்கிழமையில் நந்திபெருமானுடைய கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெறும்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: அழகர் ஆற்றில் இறங்கும் நாள் 2023